துணிவோடு இருப்போம்
பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் காற்று மண்டலத்தில் இருப்பதாக நம்பினர். அவைகள் உணவு மற்றும் தண்ணீர் வழியாக மனிதர்களின் உடலுக்குள் புகுவதற்கு வாய்ப்பிருக்கிற என்பது அவர்களின் எண்ணம். எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, நமது உடலில் 36 பாகங்கள் வழியாக தீய ஆவிகள் உடலுக்குள் ஊடுறுவமுடியும். ஒவ்வொரு பாகங்களையும் குறிப்பிட்ட தீய ஆவிகள் கட்டுப்படுத்துகிறது என்றொரு நம்பிக்கையும் மக்கள் மனதில் இருந்தது. இப்படிப்பட்ட தீய ஆவி ஒன்றைத்தான் இயேசு அந்த மனிதரிடமிருந்து ஓட்டுகிறார். பழங்காலத்தில் தீய ஆவிகளை ஓட்டுவதற்காக மந்திரவாதிகள் பல செய்முறைகளைப்பின்பற்றினர். உதாரணமாக, பேய்பிடித்தவரின் மூக்கில் வளையம் ஒன்றை மாட்டி, சில மந்திரச்சொற்களை உச்சரித்து பேய் ஓட்டுவர். அதேபோல் ஒரு வகையான செடியின் வேரை, பேய் பிடித்தவரின் அருகே கொண்டுபோக, பேய் ஓடிவிடுவதாகவும் நம்பினர். இப்படி சில செய்முறைகள் மூலமாக பேய்களை ஓட்டுகிறவர்கள் மத்தியில், “வாயை மூடு, இவரைவிட்டு வெளியே போ” என்கிற வெறும் வார்த்தைக்கு, தீய ஆவிகள் கட்டுப்பட்டு ஓடுவதைக்கண்டுதான், இயேசுவை...