மனிதர் அனைவரும் கடவுளின் மீட்பைக் காண்பர் !
இத்திருவருகைக் காலத்தில் இயேசுவின் இரண்டு வருகைகளையும் நாம் சிந்திக்கின்றோம். முதல் முறை வந்த மனுவுருவான நிகழ்வை மகிழ்ச்சி மிக்க கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாட ஆவலோடு இருக்கிறோம். அத்துடன், அவரது இரண்டாவது வருகை ஒரு நடுவரின் வருகையாக, தீர்ப்பின் வருகையாக இருக்கப் போகிறது. அதற்காக நாம் எப்போதும் விழிப்பாக, ஆயத்தமாக இருக்க வேண்டும் என்னும் உணர்வையும் இத்திருவருகைக் காலத்தில் பெறுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் இறையாட்சிக் கனவைப் பறைசாற்றுகிறது. இது யோவானின் கனவு மட்டுமல்ல, இறைமகன் இயேசுவின் கனவு, அவரது தந்தையாம் இறைவனின் கனவு. இறைவனின் வருகைக்காக அகத்திலும், புறத்திலும் ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட வேண்டும். மலை, குன்றுகள் தாழ்த்தப்பட வேண்டும். கோணலானவை நேராக்கப்பட வேண்டும். கரடுமுரடானவை சமதளமாக்கப்பட வேண்டும். இந்த சமுதாயத்தின் மேடு, பள்ளங்கள், முரண்பாடுகள் அனைத்தும் சீராக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காணவேண்டும். எல்லாருக்கும் இறையன்பு பரவலாக்கப்பட...