Category: Daily Manna

கனிவோடு கண்டிப்பது கடமையே!

மத்தேயு 14:1-12 நம்மோடு வாழும் ஒருசிலர் தவறான வழிகளில் நடக்கும் போது அவர்களுக்கு ஆழமான ஆன்மீக அறிவுரை வழங்கி அவர்களை ஆண்டவரின் அருகில் கொண்டு வர உதவி செய்ய வேண்டியது அவர் அருகில் இருக்கும் நம் கடமை. அறிவுரை சொல்லும் போது ஒருவேளை கேட்காமல் போனால் கனிவோடும் மிகுந்த அக்கறையோடும் கண்டிப்பது மிகவும் அவசியம். இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் கனிவாக கண்டிப்பை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. திருமுழுக்கு யோவான் தன் சகோதரனின் மனைவியை ஏரோது வைத்திருப்பது முறையல்ல என அவனை கனிவோடு கண்டிக்கிறார். திருமுழுக்கு யோவானின் இந்த கண்டிப்பு இரண்டு அவசியமான காரணங்களுக்காக.1) ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வருங்கால தலைமுறையினருக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் 2) தவறு என்றால் அது யார் செய்தாலும் அது தவறுதான் என்பதை அழுத்தமாக அறிவிக்கவும் இந்த இரண்டு காரணங்களை அவர்...

உங்கள் உற்காசத்தால் உங்கள் ஊர்க்காரர் உயரட்டும்!

மத்தேயு 13:54-58 ஒரே ஊரில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர்க்காரரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவதில்லை. பெரும்பாலும் பொறாமை தான் பொங்கி வருகிறது. இப்படி இருப்பதனால் ஒருவருக்கொருவர் வளர்ச்சியை காண்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல் அந்த மொத்த ஊரிலும் வளர்ச்சி என்பது இல்லாமல் போகிறது. பல நல்ல காரியங்கள் நடக்காமலே போகிறது. அதற்கு மிக சிறந்த உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகச்சிறந்த திறமையுடன் மறைநூலை எடுத்துரைத்த போது அவர்கள் தன் சொந்த ஊார்க்காரன் தானே என்று அலட்சியமாக இருந்ததால் இயேசு தன்னுடைய ஆற்றலை அங்கு வெளிப்படுத்த ஆசைப்படவில்லை. அதனால் இயேசு கிறஸ்துவின் திறமை அங்கே வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அந்த ஊரின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலே தடை ஏற்படுகிறது. நம் ஊார்க்காரன் என்ற உணர்வு நமக்குள் மேலோங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மனதார பாராட்ட வேண்டும். மிக அதிகமாகவே உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் ஒரே...

அழுகிய மீனா? அழகான மீனா?

மத்தேயு 13:47-53 இந்த அவனியில் பிறந்த அனைவரும் கடவுள் கொடுத்த மிக உயா்ந்த பரிசான வாழ்க்கையை வைத்து மிக சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்பதே நம் கடவுளின் எதிர்பார்ப்பு. மிகவும் உயரே பறப்பதற்கான அனைத்து ஆற்றலும், அருளும், ஆசீர்வாதமும் எல்லாம் வல்ல கடவுள் ஒவ்வொரு மாந்தருக்கும் நிறைவாகவே பொழிந்திருக்கிறார். ஆகவே கடவுளைப் போலவே நாம் சக்திமிக்கவர்களாக மாற முடியும். நடக்கும் இடமெல்லாம் நன்மையை செய்ய முடியும். அதிசயங்களை அனுதினமும் செய்ய முடியும். ஆனால் நடைமுயைில் இவைகள் ஏன் நடப்பதில்லை? ஏன் நம்மால் மாறமுடியவில்லை? மேலே நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாய் வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். காரணம் இரண்டு வகையான மீன்களாக மனிதர்கள் வலம் வருகிறார்கள். ஒன்று அழுகிய மீன்கள் மற்றொன்ற அழகான மீன்கள். அழுகிய மீன்கள் தங்கள் வாழ்வின் பொறுப்பை மறந்து கடமைகளை செய்யாமல் தண்ணீர் போகின்ற போக்கிலே அவர்களும் செல்வதால் அதாவது உலகின் போக்கிலே அவர்கள்...

துறந்தால் மகிழ்ச்சி தூரமில்லை

மத்தேயு 13:44-46 “கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மனிதர்கள் பெரும்பாலும் இரண்டிற்கும் ஆசைப்படுவதால் ஆபத்தான பல நேரங்களை சந்திக்க நேரிடுகிறது. மனதிற்குள்ளே நாளும் மகிழ்ச்சி மத்தளமிட வேண்டுமென்றால் ஒருசிலவற்றை நம்மிடமிருந்து கழிக்க வேண்டும். ஒருசில அவசியமற்றவைகளை துறந்து தூரே தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஒருசில தீய பண்புகளையும் நம்மிடமிருந்து எரித்து சாம்பாலாக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் புதையலை கண்டுபிடித்த ஒருவரும், முத்தை கண்டுபிடித்த ஒருவரும் மகிழ்ச்சியை சம்பாதிப்பதற்காக, உருவாக்குவதற்காக தங்களுக்குள் வைத்திருந்த அவசியமற்ற அனைத்தையும் துறக்கிறார்கள். முழுவதும் வேண்டாமென்று துறக்கிறார்கள். ஏனெனில் இந்த குப்பைகளை தூரே தட்டினால் தான் தங்களுக்குள் பேரின்பம் உண்டு என்பதை உணா்ந்த அவர்கள் இந்த சிறப்பான செயலை செய்கிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது எப்போதும் நம் அருகிலே உள்ளது. அதை நமக்கு மிகவும் தூரமாக்குவது நாம் தான். நிலையான மகிச்சியை நமக்குள் உருவாக்க வேண்டுமெனில் நாம் இழந்தே ஆக வேண்டும்....

எது வேண்டும்: அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா?

மத்தேயு 13:36-43 “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!. உமது ஆட்சி வருக!” என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்தார். தந்தையின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதே இயேசுவின் திருவுளம். தந்தையின் ஆட்சிக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் இயேசுவிடம் இருந்து பாராட்டு பெறுவர். யாரெல்லாம் இடறலாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டனை பெறுவர். அங்கலாய்ப்பா? நம் வாழ்க்கையில் அங்கலாய்ப்பையும், அழுகையையும் உருவாக்குவது அலகையே. அலகை ஆட்சி செய்வதால் இருளிலே ஒருசிலரின் பயணம் போகிறது. குணங்களும் பேய் குணங்கள் தான் இவர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அலகையின் பிடியில் சிக்கிக்கொள்பவா்கள் கடவுளின் ஆட்சிக்கு தங்கள் பங்களிப்பை தருவதில்லை. அலகையின் விருப்பப்படி இவர்கள் ஆடுவதால் வாழ்க்கை திண்டாட்டமாகவே இவர்களுக்கு அமைகிறது. ஆசீர்வாதமா? கடவுளின் ஆட்சிக்கு உதவி செய்கிறவர்கள் கதிரவனைப்போல் ஒளி வீசுவர். இறைவனிடம் நெருங்கி இருப்பதால் இவர்களுக்கு ஆசீர்வாதக்கதவுகள் திறந்தே இருக்கின்றன. நற்குணங்களால் இவர்கள் பலர் வாழ்வில் வெளிச்சமாக திகழ்கின்றனர். ஆண்டவர்...