Category: Daily Manna

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

உங்கள் பெயரை சிறப்பாக்கி விட்டீர்களா?

மத்தேயு 16:13-23 நமக்கு நாம் பெற்றிருக்கின்ற பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பெயரை மிகவும் சிறப்பாக மாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. நமது பெயர் புகழ்பெற்றதாய், பிரபலமானதாய் மாற வேண்டும். அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டியது நம் தலையாய கடமை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு என்ற பெயரை ஆண்டவர் இயேசு கிறிஸ்து உச்சரிக்கிறார். அதன் சிறப்புத்தன்மைகளை எடுத்துரைக்கிறார். பேதுரு என்றால் பாறை. யாரும் அசைக்க முடியாது. உறுதியானது திருச்சபை அதன் மேல் கட்டப்படும் பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்கள் தரப்படும். மண்ணுலகில் தடைசெய்வது விண்ணுலகில் தடைசெய்யப்படும். மண்ணுலகில் அனுமதிப்பது விண்ணுலகில் அனுமதிக்கப்படும் பேதுரு என்ற பெயரைப் பற்றி இயேசு பெருமையாக பேசுகிறார். அவரிடம் மிக உயரிய பொறுப்பினை வழங்குகின்றார். பலவீனங்கள் அவரிடம் இருந்தன. அவற்றையெல்லாம் அவர் உடைத்துப்போடடார். தன் பெயரை சிறப்பாக்கினார். பேதுருவின் கடின உழைப்பு, தாழ்ச்சி, பொறுமை, தியாகம் இவைகள்...

கடவுளின் வரத்திற்காக காத்திருப்பது தவறா?

மத்தேயு 15:21-28 கடவுள் நல்லவர். நம்பிக்கையோடு நாம் கேட்ட அனைத்தையும் நமக்கு தரக்கூடியவர். ஒருசில நேரங்களில் நாம் கேட்ட மன்றாடடுக்கள் அனைத்தும் மிக விரைவில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் காத்திருந்து தான் பெற வேண்டியிருக்கும். நம் அன்புக் கடவுள் நம்மை அதிகமாகவே அன்பு செய்கிறார். அவர் நமக்கு எதையும் தராமல் மறுப்பதில்லை. மாறாக வாரி வழங்கும் வள்ளல் அவர். ”பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என்ற இந்த இறைவார்த்தைகள் அவரின் அதிகப்படியான அன்பை எடுத்துக்காட்டுகின்றன. இதை உணராமல் நாம் பல வேளைகளில் அவசரப்படுகிறோம். நான் கேட்ட வரத்தை கடவுள் இன்னும் தரவில்லையே என்று மிகவே அவசரப்படுகிறோம். அப்படி அவரசப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கானானியப் பெண் பேய் பிடித்திருந்த தன் மகள் குணம் பெற...

இயேசுவின் தனிமை

இயேசு படகிலேறி தனிமையான ஓரிடத்திற்குச் செல்கிறார். இப்போதுதான் அவரது உறவினர் திருமுழுக்கு யோவான் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது இறப்பு இயேசுவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அந்த இறப்பு அவருக்குள்ளாக நிச்சயம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், திருமுழுக்கு யோவான் எந்த அளவுக்கு நேர்மையானவர் என்பதை, இயேசு அறியாதவரல்ல. அவருக்கு நேர்ந்த கதி, நிச்சயம் தனக்கும் நேரும் என்பதை இயேசு உணர்ந்திருப்பார். அந்த உணர்வு அவருக்குள்ளாக பல கேள்விகளை உண்டுபண்ணியிருக்கும். இயேசு மக்களிடமிருந்து தனிமையான இடத்திற்குச் சென்றதற்கு மூன்று காரணங்கள் கொடுக்கப்படுகிறது. அவரின் பணிவாழ்வில் அவரது உடலுக்கு ஓய்வு தேவையாயிருந்தது. எப்படியும் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்றிருக்கலாம். யோவான் கொலை செய்யப்பட்டிருக்கிற சூழலில் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்று இயேசு நினைத்திருக்கலாம். யோவானின் இறப்பு, அவரது சிலுவை மரணத்தை நிச்சயம் நினைவுபடுத்தியிருக்கும். அந்த கலக்கம், கவலை, கண்ணீர், இயேசுவுக்கு தளர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும். எனவே, அவர் உடல் அளவிலும், உள்ளத்து அளவிலும், ஆன்ம...

பகிர்ந்து வாழ்வோம்

பேராசை பிடித்த மனிதர்கள் கூட்டம் இந்த உலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பேராசை. உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியில், நண்பர்கள் மத்தியில் எங்கும் பேராசை என்கிற தீய பண்பு தலைவிரித்தாடுகிறது. இந்த பேராசை பிடித்த உலகில், நாமும் மற்ற மனிதர்களோடு சேர்ந்து பேராசை பிடித்தவர்களாக மாறிவிடுகிறோம். இத்தகைய பேராசை எண்ணத்திலிருந்து விடுபட நாம் அனைவருமே அழைக்கப்படுகிறோம். இந்த உலகத்தில், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இருக்கிற மிகப்பெரிய இடைவெளிக்கு இந்த பேராசை தான் காரணமாக இருக்கிறது. ஏழைகள், ஏழைகளாகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்களோ தங்களது பேராசை எண்ணத்தினால், செல்வங்களைச் சேர்ப்பதில் தங்கள் வாழ்வை வீணாக்கிக்கொண்டிருக்கிறார்கள். தங்களது தேவைக்கு போக, மீதமிருப்பது அனைத்துமே நமக்கானது அல்ல. அது மற்றவருடையது. அது மற்றவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதை விட கேவலமானது. அந்த தவறைத்தான் அறிவற்ற செல்வந்தன் செய்கிறான். நாம் சேர்த்து வைப்பது அனைத்துமே, மற்றவருக்கான என்கிற எண்ணமில்லாமல் வாழ்ந்ததால், அறிவற்ற செல்வந்தன், தனக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறான். இறைவன் நமக்கு பல கொடைகளை...