அமைதியின் அரசர் இயேசு
இயேசு தன்னுடைய பணிவாழ்வின் கடைசிப்பகுதியில் இருக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கம் ஓரளவு நிறைவேறி விட்டது. மூன்றாண்டு காலங்களாக மக்களுக்குப் போதித்து வந்திருக்கிறார். புதுமைகள் புரிந்திருக்கிறார். சீடர்களை பயிற்றுவித்திருக்கிறார். எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அதுதான், ஒட்டுமொத்த நிகழ்வின் உச்சகட்டம் என்று சொல்லப்படுகின்ற, கிளைமேக்ஸ். ஒரு திரைப்படத்தில் எவ்வளவு நேரம் தான் நாம் செலவிட்டாலும், அதனுடைய முடிவைப் பொறுத்துதான், அந்த திரைப்படம் அமையும். அதுதான் இயேசுவின் வாழ்விலும் நடக்க இருக்கிறது. இப்படியெல்லாம் இயேசு வாழ்ந்திருக்கிறாரே? அவருடைய வாழ்வின் முடிவு எப்படி இருக்கும்? எப்போது எழுதப்படும்? இதுதான் மற்றவர்கள் மனதில் இருக்கிற கேள்வி. அந்த கேள்விகளுக்கான பதில் தரக்கூடிய கடைசிக்கட்டத்தில் இயேசு இருக்கிறார். அதுதான் இந்த கடைசிப்பகுதி. இயேசு மக்களை அமைதியின் வழியில் நடத்த விரும்பினார். தன்னை அமைதியின் அரசராக அவர் வெளிப்படுத்தினார். அவர் கழுதையில் ஏறி, “ஓசான்னா” என்று மக்களின் ஆர்ப்பரிப்போடு வந்தது, இதன் அடிப்படையில் தான்....