இறைவாக்கை வாழ்வோடு இணைப்போம்!
மத்தேயு நற்செய்தியில் இறுதிக்காலம் பற்றி வருகின்ற ஒரு பகுதியை இன்று வாசிக்கக் கேட்கிறோம் (மத் 24:37-44). இயேசுவின் இரண்டாம் வருகையை விழிப்போடு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று இங்கே கிறிஸ்தவ சமூகத்திற்குச் செய்தி வழங்கப்படுகிறது. இதில் மூன்று சிறு உவமைகள் உள்ளன. அவற்றில் மானிட மகன் திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் வருவார் என்பது வலியுறுத்தப்படுகிறது. முதல் உவமை நோவா பற்றியது. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் அன்றாட செயல்களைச் செய்வதில் மூழ்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் பெருவெள்ளம் வந்து அவர்களை அடித்துச்சென்றது. கிறிஸ்தவ சமூகமும் அன்றாடக் கவலைகளில் மூழ்கியிருந்துவிட்டுத் தங்கள் வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை மறந்துவிடலாகாது. அவர்களுக்கு வழங்கப்படும் செய்தி: விழிப்பாயிருங்கள்! கிறிஸ்துவை அணிந்துகொண்டு, கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பதே உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்! திருவருகைக் காலம் “எதிர்நோக்கிக் காத்திருக்கும்” காலம் ஆகும். எபிரேய மக்கள் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தனர் என்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின எனவும் நாம்...