Category: Daily Manna

இயேசு என்னும் மீட்பர் !

அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பது வானதூதரின் செய்தி. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பவர் என்பதே அவரது பெயரின் பொருள். கிறிஸ்துமஸ் விழா தரும் செய்தியும் இதுவே. அவர் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பார், விடுவிப்பார். நமது பாவங்களிலிருந்து நாம் நமது சொந்த முயற்சியினால் விடுதலை பெற முடியாது. நமது இயல்பே பாவம் செய்வதற்கேற்ற இயல்பாக அமைந்திருப்பதால், நமது சொந்த ஆற்றலால் விடுதலை பெறவும் இயலாது. எனவே, இயேசுவின் அருளை நாடுகிறோம். அவரது மீட்புக்காக வேண்டுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, நமது வாழ்வில் அவரது மீட்பு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று சிறப்பாக மன்றாடுவோம். மன்றாடுவோம்: மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் Nபுhற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்குவதாக....

உண்மையான உறவு

எந்த ஒரு மனிதரைப் பற்றி அறிய வரும்போது, மக்களிடையே எழக்கூடிய இயல்பான கேள்வி, இவருடைய குடும்பம் எது? இவர் பிறந்த ஊர் எது? போன்றவை. மத்தேயு நற்செய்தியாளர் தன்னுடைய நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர் யூதர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்றால், அதற்கேற்றாற்போல, தன்னுடைய நற்செய்தியை அவர் எழுத வேண்டும். யூதர்களின் வாழ்வில் மையம் கொண்டிருக்கிற முக்கியமானவர்கள், இயேசுவுக்கு நெருக்கமாக இருந்தால், அதை வைத்து, அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது எளிதானது. எனவே தான், மத்தேயு நற்செய்தியாளர் ஆபிரகாமை, நம் ஆண்டவர் இயேசுவுக்கு தொடக்கமாக தருகிறார். ஆபிரகாம் யார்? எதற்காக ஆபிரகாமை இயேசுவின் தொடக்கமாக மத்தேயு நற்செய்தியாளர் எழுத வேண்டும்? ஆபிரகாம் இஸ்ரயேல் மக்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருத்தப்பட்டவர். அவர் வழியாகத்தான் கடவுள் தங்களை தேர்ந்து கொண்டதாக மக்கள் நம்பினர். அதையே வழி, வழியாக ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். ஆபிரகாமுக்கு இணையானவராக அவர்கள் வேறு எவரையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை....

நமது சான்று எது ?

தனது பணி இறைவனின் பணிதான் என்பதற்கான சான்றுகளாக இயேசு முன்வைப்பவற்றை இன்று வாசிக்கிறோம். திருமுழுக்கு யோவான். யோவான் “இவரே இறைவனின் செம்மறி” என்று அறிவித்தார். தந்தை ஒப்படைத்த செயல்கள். எளியோருக்கு நற்செய்தி, நோயுற்றோருக்கு நலம், சிறைப்பட்டோருக்கு உரிமை வாழ்வு என்பவை இறைவனால் அனுப்பப்பட்டவரின் செயல்கள். இயேசு அவற்றைச் செய்தார். வானகத் தந்தை. “இவர் என்பார்ந்த மகன். இவருக்கு செவிசாயுங்கள்” என்ற தந்தையின் குரலை பலர் கேட்டிருந்தனர். மறைநூல். இயேசுவின் வாழ்வில் நடந்த பலவும் மறைநூலில் முன்குறித்தபடியே நிகழ்ந்திருந்தன. யூத முறைப்படி ஒருவருக்கு இரண்டு சாட்சிகள் போதும். ஆனால், இயேசு தனது பணியின் உண்மைத் தன்மையை மெய்ப்பிக்க மறுக்க இயலாத வகையில் நான்கு சான்றுகளை வழங்குகிறார். நாம் இறைவனின் விருப்பப்படியே வாழ்கிறோம் என்பதற்கு என்ன சான்றுகள் இருக்கின்றன என்று இத்தவக்காலத்தில் ஆய்வு செய்வோம். மன்றாடுவோம்: நிறைவின் நாயகனாம் இயேசுவே, உம்மைப் பற்றுகிறோம். மறைநூலின்படியும், இறைத்தந்தையின் விருப்பப்படியும் நீர் வாழ்ந்தீர். பணி செய்தீர். உம்மைப்...

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை

திருமுழுக்கு யோவானைப் பற்றிய சான்று பகர்தலின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம்(லூக்கா 7:24-30). திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தவர். மக்கள் மனம்மாற வேண்டும், மக்களை ஆளும் மன்னன் மனம்மாற வேண்டும். தீய வழிகளை விட்டுவிட்டு, கடவுளின் அரசில் அவர்கள் நுழைய வேண்டும் என்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அதற்காக தவவாழ்க்கையை வாழ்ந்தவர். அவரைப்பற்றி இயேசு மக்களுக்குப் போதிக்கிறார். பொதுவாக இயேசு தனது போதனையில் தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ மிகுதியான வார்த்தைகளைப் பேசுவது கிடையாது. வெறும் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ இயேசுவின் போதனை அமைந்தது இல்லை. ஆனால், இன்றைய நற்செய்தியில் அப்படிப்பட்ட இயேசு, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு யோவானின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது இயேசு, யோவானுக்கு கொடுத்த மணிமகுடம். யோவானின் நல்ல வாழ்வை, தவ வாழ்வை, புனிதமிக்க வாழ்வை அங்கீகரிப்பதற்கான போதனை. நமது வாழ்வில் நல்லது செய்கிறவர்களையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான...

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்வோம்

பேறுபெற்றோர் என்று சொல்லப்படுவது ஒரு சிறப்பு அந்தஸ்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக நடைமுறையில் இருக்கிறது. முக்கியமான ஒருவரின் அன்பையும், பாசத்தையும் பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று சொல்கிறோம். திருச்சபையில் கடவுளின் அன்பையும், அருளையும் பெற்று, சிறப்பு பெற்றவர்களை பேறுபெற்றவர்கள் என்று போற்றுகின்றோம். அப்படி கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். தொடக்கக்காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் பலர் தங்களது உயிரை இழந்தனர். கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகினர். இப்படிப்பட்ட பிண்ணனியில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்று பலர் தயக்கம் காட்டினா். தங்களது உயிரை இழந்து கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வதனால் தங்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன என்று கேட்கத்தொடங்கினார்கள். இதுதான் கிறிஸ்துவையும், கிறிஸ்தவத்தையும் அழிக்க நினைத்தவர்கள் எதிர்பார்த்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நற்செய்தியாளரின் இந்த வார்த்தைகள், அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். கிறிஸ்துவை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டால், கடவுளின் அன்பும் இரக்கமும் அவர்களுக்கு கிடைக்கும் என்கிற அந்த எண்ணம் தான், அவர்களை மீண்டும்...