Category: Daily Manna

வாக்குறுதி மாறாத கடவுள்

கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிக்கிறவர் என்பதனை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துவதாக உணர்கிறேன். எவ்வளவு தடைகள் வந்தாலும், இடப்பாடுகள் வந்தாலும் கடவுள் தன்னுடைய வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனை விவிலியத்தின் இஸ்ரயேல் மக்களின் வாழ்வும், இயேசுவின் போதனையும் நமக்கு தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக, இன்றைய உவமை அமைகிறது. ஒரு நாளின் பல வேளைகளில் வேலை செய்வதற்கு வேலையாட்கள் வருகிறார்கள். அவர்கள் தலைவரிடத்தில் பேரம் பேசவில்லை. எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். இந்த தலைவர், இவ்வளவு தாமதம் ஆனாலும், நமக்கு வேலை தருவேன் என்று சொல்கிறார். வேறு யாராக இருந்தால், நிச்சயம் இவ்வளவு நேரம் கழித்து, நம்மை வேலைக்கு எடுத்திருக்க மாட்டார். அவர் நமக்கு “உரிய கூலியைக் கொடுப்பேன்“ என்று வாக்குறுதியைத் தந்திருக்கிறார். நிச்சயம் நமக்கு உரிய கூலி இவரிடத்தில் கிடைக்கும், என்று தலைவரின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் வேலை...

எச்சரிக்கை உணர்வு

இந்த உலகம் என்பது ஒரு சத்திரம் போன்றது. ஒரு சத்திரத்தில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். அவர்களுக்கான உணவையும் அங்கே பெற்றுக்கொள்ளலாம். அங்கே தங்கி இளைப்பாறவும் செய்யலாம். ஆனால், யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. நமது தேவை முடிந்தவுடன், நமது பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், சத்திரம் நமக்கான நிலையான இடம் கிடையாது. நமக்கென்று, நாம் வாழ்வதற்கென்று அருமையான இல்லம் இருக்கிறது. அது போல, இந்த பூமியில் நமது வாழ்வு நிலையான வாழ்வல்ல. இது ஒரு பயணத்தில் நாம் சந்திக்கின்ற சத்திரம் போன்றது. இதற்கு நாம், நிலையாக இருப்பது போல, உரிமை கொண்டாட முடியாது. இந்த மனநிலையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குத்தரும் அழைப்பு. இயேசுவின் வார்த்தைகள், செல்வந்தர்களைப்பற்றி கடினமானது என்றாலும், அது அவர்களைத் தீர்ப்பிடுவது அல்ல. ஏனென்றால், செல்வந்தர்களாக இருந்து, இயேசுவின் நன்மதிப்பைப்பெற்றவர்களும் இருக்கிறார்கள். சக்கேயு மிகப்பெரிய செல்வந்தர். ஆனால், இயேசு கொடுக்கும் மீட்பைப்பெற்றுக் கொண்டார். அரிமத்தியா...

பகிர்வோம், இறையரசில் பங்குபெறுவோம்

பணக்கார இளைஞர் தன்னுடைய வாழ்க்கயைிலே சட்டத்தின் அடிப்படையில் அனைத்தையும் கடைப்பிடித்திருக்கிறார். ஆனால், ஆன்மீக அடிப்படையில் பார்த்தால், அதன் உள்ளர்தத்தையும் மறந்தவராக இருக்கிறார். பத்துக்கட்டளைகளை கடைப்பிடித்தவர், அதன் உள்ளர்த்தத்தையும் மறந்தவராக இருக்கிறார். தன்னை அன்பு செய்வது போல, கடவுளை அன்பு செய்வதையும் தன்னை அன்பு செய்வதைப்போல, சக மனிதர்களை அன்பு செய்வதையும் இணைத்துப்பார்க்கத் தவறிவிடுகிறார். அவருடைய தவறு, அவர் மனிதர்களை அன்பு செய்ததை விட செல்வத்தை அதிகமான அன்பு செய்கிறார். மற்றவர்களை அன்பு செய்வதைவிட தன்னை அதிகமாக அன்பு செய்கிறார். இறையாட்சிக்கு தகுதிபெறுவதற்கு தடையாக இருப்பது இவைகள்தான். இந்த உலகத்தின் மீது பற்று இருந்தால், மறுஉலகில் செல்வம் சேர்க்க முடியாது என்பதுதான் இயேசு தருகிற செய்தி. தங்களையும், தங்கள் பொருட்களையும் முன்னிறுத்துகிறவர்கள், கடவுளை புறந்தள்ளுகிறார்கள். அதற்கு உதாரணம் இந்த இளைஞர். கடவுளை முன்னிறுத்துவோம். ~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

உறுதியான எண்ணம்

நம்பிக்கை என்கிற வார்த்தையே ஒரு நேர்மறையான வார்த்தையாக இருக்கிறது. அந்த வார்த்தையே ஒருவரைப் புகழ்ந்து சொல்வதற்கு போதுமானது. ஆனால், இயேசு அதனைவிட பெரிய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ”உமது நம்பிக்கை பெரிது” என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? இதனை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம்? இங்கே ”பெரிது” என்கிற வார்த்தையை ”உறுதி” என்கிற அர்த்தத்தோடு பொருத்திப்பார்த்தால், சரியானதாக தோன்றுகிறது. அந்த பெண்ணின் நம்பிக்கைக்கு பல சோதனைகள் வருகிறது. இயேசுவின் வார்த்தைகளை சற்று எதிர்மறையாக எடுத்தாலும், நிச்சயம் நம்பிக்கையை அசைத்துப் பார்ப்பதாக அமைந்துவிடும். ஆனால், அந்த பெண் உறுதியாக இருக்கிறார். விடாப்பிடியாக இருக்கிறார். எதற்கும் சாயாது, துணிவோடு இருக்கிறார். காரணம், எதை அடைய வேண்டுமோ, அந்த இலக்கில் அவள் உறுதியாக இருக்கிறாள். இப்போதைக்கு அவளது மகள் குணமடைய வேண்டும். அதற்காக எதனையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார். கொண்ட எண்ணத்தில் பற்றுறிதியாய் இருக்கிறாள். அந்த எண்ணம் தான், இயேசுவுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அதற்கான பலனையும்...

மனிதம் மலர நம்மால் இயன்றதைச்செய்வோம்

யூத இனம் ஆண் ஆதிக்க சமுதாயச்சிந்தனை கொண்டது. பெண்களும், குழந்தைகளும் வெறும் பொருட்களாகவே கருதப்பட்டனர். அவர்களுக்கென்று எந்தவித உரிமையும் கிடையாது. அப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்த இயேசு நமக்கு புதிய படிப்பினையைத்தருகிறார். தான் ஆணாதி்க்கச்சமுதாயத்தில் பிறந்திருந்தாலும், அந்த ஆணாதிக்கச்சிந்தனைகள் தன்னை நெருங்குவதற்கு, இயேசு ஒருபோதும் அனுமதித்தது இல்லை. மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிக்கப்படக்கூடியவர்கள் என்பதுதான் அது. நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடத்திலே கொண்டுவந்தவர்கள் குழந்தைகளின் தாய்மார்களாகத்தான் இருக்க வேண்டும். இயேசு அவர்களை அன்போடு வரவேற்கிறார். அவர்களுக்கு மதிப்பு கொடுக்கிறார். அவர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் கடவுளின் பிள்ளைகள். நம் அனைவருக்கும் அவர்தான் தந்தை. அப்படியிருக்க இந்த சமுதாயப்பாகுபாடுகளில் எப்படி உண்மை இருக்க முடியும்? அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சீடர்கள் ஆணாதிக்கச்சிந்தனையை வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இயேசு அந்த சிந்தனையை முற்றிலுமாக எதிக்கிறவராக இருக்கிறார். மற்றவர்களை அடிமைப்படுத்துகிற எந்தவொரு வேறுபாடும், நொறுக்கப்பட வேண்டும். நாமும், இயேசுவைப்பின்பற்றி வேறுபாடுகளைக்களைவோம். மனிதத்தை உயர்த்திப்பிடிப்போம்....