வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை
ஒரு தாலந்து என்பது வெள்ளி நாணய அடிப்படையில் ஒரு தொழிலாளியின் 15 வருட கூலிக்கு சமம். முதல் இரண்டு நபரும் தலைவர் கொடுத்த தாலந்தை வைத்து இன்னும் அதிகமாக சம்பாதிக்க முயற்சி எடுக்கிறார்கள். தலைவர் அந்த முயற்சியை பாராட்டுகிறார். ஒருவேளை அவர்கள் அதில் நஷ்டம் அடைந்திருந்தாலும், தலைவர் அவர்களின் முயற்சியை நிச்சயமாகப்பாராட்டியிருப்பார். தலைவர் கோபப்படுவது மூன்றாவது ஊழியரை. அதற்கு காரணம் அவரின் முயற்சியின்மை, சோம்பேறித்தனம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வு என்னும் கொடையைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வில் நமக்கென்று குறைகள் இருக்கலாம், நமக்கென்று பலவீனங்கள் இருக்கலாம். ஆனால், அந்த வாழ்வை எந்த அளவுக்கு முயற்சி எடுத்து நாமும் பயன்பெற்று, மற்றவர்களின் வாழ்விலும் ஒளியேற்றுகிறோம் என்பதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. நான் குறையுள்ளவன், எத்தனைமுறை முயன்றாலும், நான் வெற்றி பெற மாட்டேன் என்கிற முயற்சியின்மையை தலைவர் வெறுக்க மட்டும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனையும் கொடுக்கிறார். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற கொடை மூலமாக எவ்வளவோ...