இயேசுவின் பெருந்தன்மை
கலிலேயாவிலிருந்து யெருசலேமுக்கு நேரடியாக, எளிதாகச் செல்ல வேண்டுமென்றால் சமாரியா பகுதி வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், யூதர்கள் சமாரியா வழியாக செல்வதை வெறுத்தனர். காரணம், சமாரியர்களுக்கும், யூதர்களுக்குமிடையே நூற்றாண்டுகளாகப் பகை இருந்தது. வேறு வழியில்லாமல் சமாரியா பகுதி வழியாகச்செல்லும் யூதர்களை சமாரியர்கள் வழிகொடுக்காமலும், அல்லது அவர்களை அவமானப்படுத்தவும் செய்தனர். சில வேளைகளில் காயப்படுத்தவும் செய்தனர். இயேசு யெருசலேமுக்குப்போவதற்கு சமாரியர் ஊர் வழியாகச்செல்வதைத் தோ்ந்தெடுத்தது சற்று ஆச்சரியத்தைக்கொடுக்கிறது. ஏனென்றால், அங்கே விருந்தோம்பலை எதிர்பார்ப்பது அறிவீனம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், இயேசு அதை பொருட்படுத்தாமல் அந்த வழியாகச்செல்ல ஆவண செய்கிறார். காரணம், இயேசு பகைமையை மறந்து, நட்புறவாட ஒரு முயற்சியைச் செய்கிறார். சமாரியர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர். எனவே, யூதராகிய இயேசு அவர்களோடு நட்பு பாராடட முயல்வது, மற்றவர்கள் பார்வையில் மிகப்பெருந்தன்மையான ஒன்று. அத்தகையை பெருந்தன்மையை இழிவுபடுத்துவதை சீடர்களால் தாங்க முடியவில்லை. எனவேதான், யோவானும், யாக்கோபும் கோபம் கொள்கிறார்கள். இயேசு அதனை விரும்பவில்லை. மேன்மக்கள்...