Category: Daily Manna

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு...

வாழ்வு தரும் இறைவார்த்தை

இயேசு தன்னுடைய வார்த்தைகளைச் சீடர்களின் மனதில் நன்றாகப் பதிப்பதற்கு சொல்கிறார். சீடர்கள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட தருணத்திலே, அனைத்தையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தவர்கள். ஆனால், அதற்கு பிறகு, அவர்கள் இயேசுவிடமிருந்து அவ்வளவாக கற்றுக்கொண்டது போல தெரியவில்லை. இயேசுவையும் முழுமையாகப் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான், தங்களுக்குள்ளாக சண்டையிட்டுக்கொண்டது, அதிகாரம், பதவிக்காகப் போட்டியிட்டது போன்ற நிகழ்வுகள். ஆக, சீடர்கள், இயேசுவின் வார்ததைகளை, தங்களுக்கானது என்ற எண்ணம் இல்லாமல், யாருக்காகவோ போதிக்கிறார் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் தான், இயேசு அவரது வார்த்தைகளை உள்ளத்தில் பதிக்குமாறு கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகள் வெறுமனே கேட்டு, காற்றில் விடுவதற்கான வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வார்த்தைகள். அது நம் வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய வார்த்தைகள். நமது வாழ்வை மாற்றக்கூடிய வார்த்தைகள். அந்த வார்த்தைகளை நாம் உள்ளத்தில் பதித்து, அதனை சிந்தித்து அதன்படி வாழ்ந்தால், நமக்கு ஏராளமான நன்மைகள் நிச்சயம்...

வாழ்வை மாற்றுங்கள்

சீடர்கள் இயேசுவிடத்திலே யார் பெரியவர்? என்ற கேள்வி கேட்கிறார். இயேசு அவர்களிடத்தில் ”நீங்கள் மனந்திரும்பிச் சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று பதில் சொல்கிறார். சீடர்கள் நிச்சயம் இந்த பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதை, இதை எல்லாம் செய்யுங்கள், நீங்கள் விண்ணரசிற்குள் நுழைய முடியும் என்ற பாணியில், இயேசுவின் பதில் அமைந்திருக்கும் என்று சீடர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால், இயேசு முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலைத் தருகிறார். அவர்களை மனம் மாறுவதற்கு, மாற்றம் பெறுவதற்கு அழைப்புவிடுக்கின்றார். இதனுடைய அர்த்தம் என்ன? இயேசு எதற்காக மனமாற்றத்தைப் பற்றி இங்கு பேசுகிறார்? அப்படி மனமாற்றம் இல்லையென்றால், விண்ணரசிற்கான வாய்ப்பே இல்லை என்பதையும் உறுதியாகச் சொல்கிறார். ஏன்? இயேசுவோடு இருந்து, அவருக்குப் பின்னால் அவருடைய பணி செய்யக்கூடிய சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று சாதாணமானவர்கள் கேட்கக்கூடிய கேள்வியை கேட்டு, தங்களுக்குள் சண்டையிடுவது இயேசுவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தவறான பாதையில்...

பணிப்பொறுப்பு

பெரிய ஏரோது தனது காலத்தில், அனைவரையும் சந்தேகிக்கிறவனாகவே வாழ்ந்து இறந்தான். தனது மனைவியரை மட்டுமல்ல, தனது பிள்ளைகளையும் அவன் கொன்றொழித்தான். தனது அரசிற்கு எதிராக யார் தடையாக இருப்பதாகத்தோன்றினாலும், அவர்களை கொலை செய்தான். பெரிய ஏரோதிற்குப்பிறகு அவன் ஆட்சி செய்த பகுதிகள் மூன்று நிலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அவனுடைய மூன்று பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவன் தான் குறுநில மன்னன் என்று நற்செய்தியாளரால் சொல்லப்படுகிற ஏரோது அரசன். இவன் ஏரோது அந்திபாஸ் என்று அழைக்கப்பட்டான். கலிலேயா மற்றும் பெரியா பகுதிகளை இவன் ஆட்சி செய்து வந்தான். இயேசு கலிலேயர் என்பதால், இயேசுவினுடைய அரசரும் இந்த ஏரோதுதான். எனவே தான், பிலாத்து முதலில் இயேசுவை, முதலில் இவனிடம் அனுப்பினான். ”இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன். பிணிகளைப்போக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவுறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்று லூக்கா 13: 32ல் சொல்வது இவனைப்பற்றித்தான். ஏனெனில், இந்த ஏரோது...

பணிவாழ்வு

இன்றைய நற்செய்தியிலே (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6), இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பணிவாழ்விற்கு தயாரிப்பாக, அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்புகிறார். இயேசு அவர்களை அனுப்புகிறபோது, பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். எதற்காக பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று இயேசு சொல்கிறார்? ஒரு வழிப்பயணத்தில் நமக்கு பல தேவைகள் நிச்சயம் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சென்றால், அந்த பணியை இன்னும் அதிக ஆர்வத்தோடு, நேர்த்தியோடு செய்து முடிக்கலாம். அப்படியிருக்கிறபோது, இயேசு ஏன் பொருள் இல்லாத பயணத்தை ஊக்குவிக்கிறார். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். முதலாவது, பணிவாழ்வில் தன்னை இணைத்துக்கொள்கிற ஒவ்வொருவரும், கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். செய்வது நாமாக இருந்தாலும், நம் வழியாகச் செய்து முடிப்பவர், தந்தையாகிய கடவுள். நாம் வெறும் ஊழியர்கள். அவ்வளவுதான். நமக்கே கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் எதைப்பற்றி மக்களிடையே போதிக்கப்போகிறோம்? நமது அனுபவமே...