Category: Daily Manna

தேடி வந்த காலம்

இயேசு கண்ணீர் விட்டு அழுத மூன்று நிகழ்வுகளைப் புதிய ஏற்பாடு சுட்டிக்காட்டுகிறது. அவற்றுள் ஒன்றுதான் எருசலேம் நகரையும், கோவிலையும் பார்த்து அவர் அழுதது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள் இறைவனின் கோவில் அங்கே இருந்தாலும்கூட, இறைவனைவிட்டு வெகு தொலைவில் வாழ்ந்ததற்காக மனம் வருந்தி அவர் அழுதார். அது மட்டுமல்ல, கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை என்ற பரிதாப நிலையையும் மனதில் கொண்டு அவர் அழுதார். ஒருவேளை இன்று இயேசு நமக்காகவும்கூட அழலாம். இறைவன் நம்மைத் தேடிவந்து, அருளாசிகள் பல பொழிந்து, நன்மைகளால் நம் வாழ்வை நிரப்பியிருந்தும்கூட, நாம் அவரைக் கண்டுகொள்ளாமல், புறக்கணித்த காலங்களுக்காக இயேசு அழலாம். நாமே அந்த எருசலேம் என்பதை உணர்வோம். நமது வாழ்வில் பல்வேறு சூழல்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக இறைவன் நம்மைத் தேடிவருகிறார், அறிவுரைகள் தருகிறார், எச்சரிக்கையும் தருகிறார் என்பதை மறந்துவிட வேண்டாம். மன்றாடுவோம்: தேடிவரும் தெய்வமே இறைவா, நாங்கள் உம்மைத் தேடிவருவதைப்...

இரு மனநிலைகள்

மினாக்களைப் பற்றிய இயேசுவின் உவமை இருவிதமான மனநிலைகளை எடுத்துக்காட்டுகிறது. உயர்குடிமகன் தன் பணியாளர்களுக்கு பத்து மினாக்களைக் கொடுத்து அவற்றைக் கொண்டு வாணிகம் செய்யப் பணிக்கின்றார். சில காலம் கழித்து அவர் திரும்பி வரும்போது அவர்களில் பலரும் வாணிகம் செய்து ஈட்டியதைப் பெருமையுடன் அறிக்கை இடுகின்றனர். உயர் குடிமகன் அவர்களைப் பாராட்டுகிறார். ஈட்டியது எவ்வளவு என்று கணக்குப் பார்க்கவில்லை. அவர்களது நம்பிக்கைக்குரிய பண்பைப் பாராட்டுகிறார். ஒரே ஒரு பணியாளன் மட்டும் பணம் ஈட்டாதது மட்டுமல்ல, தம் தலைவரையே குறைசொல்லவும் துணிகிறார். நீர் கண்டிப்புள்ளவர், வைக்காததை எடுக்கிறவர், விதைக்காததை அறுக்கிறவர் என்று அவரையே தன் உழைப்பின்மைக்குப் பொறுப்பாளியாக்குகிறார். தலைவரோ அவருக்கு அவரது வாய்ச்சொல்லைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார். இரண்டாவதாக உள்ள மனநிலையைப் பலரிடமும் நாம் பார்க்கிறோம். ஒருவேளை நம்மிடம்கூட அந்த மனநிலை இருக்கலாம். பொறுப்புகளை ஏற்காமல், உழைக்காமல், உழைக்க மனமில்லாமல் வாழ்வதோடு, அதற்கான பொறுப்பையும் பிறர்மேல் சுமத்துகின்ற மனநிலையெ அது. ஆசிரியர் சரியில்லை, பள்ளி சரியில்லை,...

இயேசுவின் தன் முனைப்பு !

பல முறை வாசித்து, மகிழ்ந்த பகுதி சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வு. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடும் இந்த நிகழ்வில் சக்கேயுவின் மனமாற்றத்தையும், அவரது வாழ்வை இயேசு தலைகீழாக மாற்றிப்போட்டதையும் நாம் எண்ணி வியக்கிறோம். ஒரு மாற்றத்துக்காக இன்று இந்த நிகழ்வில் சக்கேயுவைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவின் செயல்பாட்டைச் சிந்திப்போம். சக்கேயுவின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் இயேசு எடுத்த முதல் முயற்சிதான். இயேசு சக்கேயு ஏறியிருந்த அத்திமரத்தை அண்ணாந்து பார்த்து, அவரை விரைவாய் இறங்கிவர அழைத்திருக்காவிட்டால், சக்கேயு மரத்தின்மேலேயே இருந்திருப்பார். இயேசுவைக் கண்களால் கண்டதோடு அவரது ஆவல் நிறைவேறியிருந்திருக்கும். இயேசு தாமாகவே முன்வந்து அவரை அழைத்ததுதான் சக்கேயுவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. மனமாற்றத்தைத் தந்தது. இயேசு எடுத்த இந்த முன் முயற்சியைத்தான் தன் முனைப்பு, தன்னார்வம் என்று சொல்கிறோம். இது ஒரு தலைமைப்பண்பு. நல்ல தலைவர்கள் எப்போதும் தன் முனைப்பு, தன்னார்வம் உடையவர்களாகவும், மாற்றங்கள் தாமாகவே விளையும்...

எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புக்கள்

இன்றைய நமது வாழ்க்கை மாற்றம் பெறுவதற்கு ஒரு வினாடி, ஒரு வாய்ப்பு போதும். நாம் எங்கோ சென்றுவிடுவோம். ஆனால், நமது வாய்ப்புகளை நாம் நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்புக்களை நல்ல முறையில், முழுமையாக் பயன்படுத்துகிறபோது, நிச்சயம் நமது வாழ்க்கை ஒளிரக்கூடியதாக இருக்கும். அப்படி கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, தனது வாழ்வையே மாற்றிய ஒரு மனிதனின், வாழ்க்கை அனுபவத்தைத்தான், இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக அறிய வருகிறோம். பார்வையற்ற மனிதன் வழியோரமாய் உட்கார்ந்திருக்கிறான். தனக்கு பார்வை இல்லை, இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்று அவன் நம்பிக்கை இழந்துவிடவில்லை. ஒவ்வொருமுறையும் ஏதோ ஒன்று வித்தியாசமாக அவன் உணர்ந்தால், உடனே அருகிலிருந்தவர்களிடம் அதுபற்றி விசாரித்துக்கொண்டிருந்தான். அதேபோலத்தான் இயேசுவின் வருகையையும் விசாரித்தான். ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்று தேடிக்கொண்டேயிருக்கிறான். வாய்ப்பு கிடைத்ததும் அதனை அவன் பற்றிக்கொண்டான். அதுதான் வாழ்வை மாற்றுவதற்கு, வாழ்வையே புரட்டிப்போடக்கூடிய வாய்ப்பு. அதனை அவன் பயன்படுத்திக் கொண்டான். வாழ்வில் ஒளியைப்...

செய்து பாருங்க.

காலம் பொன்போன்றது. பத்து தோழியர் உவமையிலும் தாலந்து உவமையிலும் காத்திருக்கிறார்கள், மணமகனுக்காக அல்லது தலைவனுக்காக. இந்த உவமையின் சிறப்பு செய்தி, காத்திருக்கும்போதும் உழைக்க வேண்டும் என்பதுதான். தன் வேலை உண்டு, தான் உண்டு என்று வேலையில் கவனம் இருக்கவேண்டும். அடுத்தவனைக் குறை சொல்லுகிறவன், அதிலும் பணம் பொருள் உதவிகள் கொடுக்கும் ஒருவரையே குறை சொல்பவன், வேலையைச் செய்யமாட்டான். குருக்குவழி ஏதாவது உண்டா என்று பார்ப்பான். விதைத்துப் பெருக்கவேண்டிய பணத்தை, பொருளை, திறமையை, மண்ணுக்குள் புதைத்து மக்கிப்போகவைத்தது மா பெருந்தவறு. ஆகவே, உழைக்காதவன், அடுத்தவனைக் குறைசொல்பவன், குருக்குவழியில் சம்பாதிக்க நினைப்பவன், கிடைத்ததையும் பயன்படுத்தத்தெறியாதவன்,கிடைத்ததைக் கெடுப்பவன், உள்ளதையும் இழந்து தண்டனையும் பெருவது சரியானதே. இந்த குறைகள் இல்லாதவன் வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் உயர்வான். எல்லாம் சேர்ந்துகொண்டே இருக்கும்.அவனுக்கு எதுவும் குறையிருக்காது. செய்து பாருங்கரூhநடடip;.. –அருட்திரு ஜோசப் லீயோன்