நமது பணி யாருக்காக?
ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் பங்கில் பணிபுரிவது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லா பங்குகளிலும் பொதுவான ஒரு தோற்றம் இருக்கும். அது என்ன தோற்றம்? பங்கில் இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். முதல் வகையான மக்கள் அருட்பணியாளரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள். வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறவர்கள். இரண்டாவது வகையான மக்கள் மிகச்சிறிய விழுக்காடு உள்ளவர்கள். ஆலயத்தின் வழிபாடுகளில் நாட்டம் கிடையாது. ஆலயத்தின் பக்கமே திரும்பிப்பார்க்காதவர்கள். ஆனால், பங்கில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இவர்களைப் பகைத்தால், பங்கில் அருட்பணியாளர் பணிபுரிய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தங்களை வலிமையாகக் காட்டிக்கொள்கிறவர்கள். அருட்பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறவர்கள். இவர்கள் செய்வது அநீதி என்று தெரிந்தாலும், மற்ற பெரும்பான்மையினர் இவர்களை எதிர்த்து நிற்பதில்லை. ஆனால், மறைமுகமாக அருட்பணியாளர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள். இது எல்லா பங்கிலும் காணப்படக்கூடிய பொதுவான தோற்றமாக இருக்கிறது. இப்போது நம்மிடம் எழக்கூடிய கேள்வி: இவர்களுள்...