Category: Daily Manna

பாலைவனக் குரல்

ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் கேட்க வேண்டிய கேள்வி, நீ யார்? என்ன பதில் சொல்லப்போகிறோம்? திருமுழுக்கு யோவானிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ‘நான் பாலை வனக் குரல்’ என்று ஏசாயா இறைவாக்கை (40’3) மேற்கோள்காட்டி பதில் சொன்னார். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் முன்னோடிகள். அவரது வருகைக்குத் தயார் செய்யும் தயாரிப்பாளர்கள். அவரது வருகையை முன்னறிவிக்கும் ஒலிப்பான்கள். நம்முடைய சொல், செயல், நடவடிக்கை அனைத்தும் இயேசுவை எதிரொலிப்பதாய், பிறதிபலிப்பதாய் இருக்க வேண்டும். நம் வாழ்வு இயேசுவை அடையாளம் காட்டி அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். தன் எதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டார். தன் உண்மை நிலையை மறுக்கவில்லை. தன்னை தாழ்த்துவதற்குத் தயங்கவில்லை. தான் ஒரு ‘பாலை வனக் குரல்’ என்றும், “எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” தாழ்த்தினார். பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம்...

புதிய ஆண்டில் புதிய நம்பிக்கைகள் !

இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா! கடந்த ஆண்டின் ஏமாற்றங்கள், தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, புதிய எதிர்நோக்கோடு இந்த ஆண்டைச் சந்திக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நம் வாழ்வின் தனிப்பட்ட போராட்டங்கள், பொதுநீதிப் போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகுமோ என்னும் கவலையும், கலக்கமும் நம்மைத் தாக்கலாம். ஆனால், இன்றைய இறைவாக்கு நமக்கு ஊக்கமூட்டுகிறது. மரியா, யோசேப்புடன் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் வியப்படைந்தனர், மகிழ்ச்சியும் அடைந்தனர். “அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழ்ந்திருந்தது”. எனவே, கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டே திரும்பிச் சென்றனர். “ஆண்டவர் உனக்கு ஆசிவழங்கி உன்னைக் காப்பாராக” என்னும் ஆண்டவரின் ஆசிமொழி ஆண்டின் முதல் நாளில் நமக்கு வழங்கப்படுகிறது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு...

கிறிஸ்துமஸ் பெருவிழா

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவை நாம் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு தேவையா? அதற்காக நாம் செலவழிக்கக்கூடிய பணம் வீணாக விரயமாகிறதா? இந்த கொண்டாட்டங்களும் வெறும் சடங்கு தானா? கிறிஸ்து பிறப்பு விழா நம்மில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது? இது போன்ற கேள்விகளை எழுப்பி, கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றிய செய்தியை, சிந்திக்கலாம் என்று நினைக்கிறேன். கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, ஏராளமான பணத்தை நாம் தேவையில்லாமல் வாரி இறைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தோடு பல நல்ல செயல்பாடுகளும் நல்ல உள்ளங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு பல நல்ல மக்கள் சிறப்பான உதவிகளைச் செய்து, இந்த திருவிழாக்களின் நோக்கத்தை இன்னும் உரக்க, இந்த உலகத்திற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒருபுறம் கொண்டாட்டம் என்கிற பெயரில் தேவையில்லாமல் பணத்தை வீண், ஆடம்பர செலவு செய்துகொண்டிருந்தாலும், மறுபுறம் உதவிகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்து பிறப்பு விழா...

ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்

திருப்பாடல் 89: 1 – 2, 3 – 4, 26 & 28 இறைவனுடைய அன்பை ஆழமாக உணர்ந்த ஆசிரியர், இறையனுபவத்தை பகிர்ந்து கொள்கின்ற பாடல் தான், இந்த திருப்பாடல். இறைவனின் அன்பை முழுமையாக அனுபவித்திருக்கிற ஒருவர், இறையன்பைப் பற்றி சொல்கிறபோது, அது வலிமைமிக்கதாக மாறுகிறது. அந்த வகையில், இந்த திருப்பாடலின் கடவுள் அன்பு அனுபவப்பூர்வமாக எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆண்டவரின் அன்புக்கு எல்லையே இல்லை, என்பதாக இந்த திருப்பாடல் சொல்கிறது. இறைவனின் அன்பை எப்படி திருப்பாடல் ஆசிரியர் அனுபவித்திருக்கிறார்? திருப்பாடல் ஆசிரியர் சாதாரண மனிதர். ஆடு மேய்க்கக்கூடியவர். ஆனால், சாதாரண நிலையிலிருந்து அவரை, இறைவன் தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுத்தார். அவரை அபிஷேகம் செய்தார். அவர் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரது தலைமுறை வழி வழியாக நிலைத்திருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இதனை, ஆசிரியரால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை. சாதாரணமான நிலையிலிருக்கிற தனக்கு, இவ்வளவு கொடைகளை வழங்குவது ஏன்? என்ற...

தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின்(திருப்பாடல் 25: 4 – 5, 8 – 9, 10 & 14) வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான்...