நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை
திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17 நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம். திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும் பார்க்கத்...