ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை
திருப்பாடல் 23: 1 – 3, 4, 5 – 6 ”ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை” தொடக்கநூல் 49: 24 ல், மோசே கடவுளை ”ஆயர்” என்று முதன்முதலாவதாகச் சொல்கிறார். இங்கு தான், இஸ்ரயேலின் ஆண்டவரை ஆயர் என்று சொல்வதற்கு தொடங்கப்படுகிறது. ஒரு ஆயரின் பணியை தாவீது அரசர் முழுமையாக அறிந்தவர். ஏனென்றால், அவர் ஆடு மேய்க்கக்கூடிய பணியைத்தான் செய்து வந்தார். இறைவாக்கினர் சாமுவேல் ஈசாயின் புதல்வர்களை அணிவகுத்து நிற்கச்செய்து, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவனை அடையாளம் காண முற்பட்டபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை இறைவன் அவருக்கு அடையாளம் காட்டினார். பிற்காலத்தில் அரசராக அவர் அருட்பொழிவு பெற்றாலும், தன்னை ஆயராக மற்றவர்கள் அடையாளம் காண்பதில் பெருமை கொண்டார். ஏனென்றால், மக்களை ஆள்வதும் ஓர் ஆயர் போன்ற பணி தான். இந்த திருப்பாடலில், தாவீது கடவுளை தன் ஆயராகப் பாடுகிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் தான் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். யாரும் மற்றவர்க்கு கீழே...