ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது
திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a) ”ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது” நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது...