உப்பாக .. ஒளியாக.
உப்பு, உவர்ப்பு தன்மையும்; ஒளி, ஒளிர்விக்கும் தன்மையும் கொண்டது. தன்னுடைய குணத்தை செயல்படுத்துவதில் உப்பும் ஒளியும் ஒன்றுக்கொன்று ஈடு இணையானது. உப்பு, இருந்த இடத்தில் இருந்துகொண்டு, அது எவ்வளவு கடினமான இடமாக இருந்தாலும் தன்னைக் கரைத்து கசியவைத்து, தன் உவர்ப்புத் தன்மையை உட்புகுத்திவிடும். அதுபோல ஒளியும் தன் ஒளிக் கதிரை ஊடகங்கள் வழியாக ஒளி ஊடுறுவல்,ஒளி விலகல், ஒளி முறிவு, ஒளிச் சிதரல், ஒளி பிரதிபலித்தல் இப்படி எப்படியாவது தன் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். நீங்கள் உப்பு, நீங்கள் ஒளி. உங்கள் தாக்கத்தை நீங்கள் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்துங்கள். உப்பைப்போல ஒளியைப்போல தன் நிலையில் திருப்தியடைய வேண்டும். ஆகா நான் உவர்ப்பாக அல்லவா இருக்கிறேன்; அடடா நான் வெப்பமாக அல்லவா இருக்கிறேன் என்று விரக்தியோ வேதனையோ அடையக் கூடாது. பாகற்காய் கசப்பாக இருப்பதில்தான் அதன் பெருமை. மாம்பழம் இனிப்பாக இருப்பதுதான் அதற்குச் சிறப்பு. இருப்பதில் திருப்தியடைந்து, நம்மிடம் இருக்கும் நம் தன்மையை எல்லோருக்கும்...