ஆன்மீகத்தேடல்
இந்த உலகத்திலே வாழக்கூடிய மனிதர்களுக்கு இரண்டு வகையான பசி இருக்கிறது. முதலாவதாக, உடல் பசி. இரண்டாவதாக ஆன்மீகப்பசி. உணவு உடல் பசியைப் போக்கிவிடும். ஆனால், அதே உணவால் ஆன்மீகப்பசியைப் போக்க முடியாது. அதனால் தான், உடல் பசியைப்போக்க எவ்வளவு ஆடம்பரம் இருந்தாலும், பணத்தில் கொழித்தாலும், ஆன்மீகப்பசியைப் போக்க முடியாததாக, பலபேருக்கு இருக்கிறது. அவர்களால் பணத்தால் ஆன்மீகப்பசியைப் போக்க முடியாது. கி.பி. 60 ம் ஆண்டில், உரோமை சமுதாயம் ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஏராளமான விருந்துகளும், கேளிக்கைகளும் நிறைந்த சமுதாயமாக அது காணப்பட்டது. அதற்காக பெருந்தொகையை மக்கள் செலவிட்டனர். அவர்கள் செல்வத்தில் கொழித்ததால், பணத்தை வாரி இறைத்தனர். இத்தகையப்பிண்ணனியில், மக்களும் உணவின் மீது அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருந்தனர். அத்தகைய மனப்போக்கை இயேசு கண்டிக்கிறார். உண்மையின் மீது, நேர்மையின் மீது, இறையரசை இந்த மண்ணில் கொண்டு வர பசி உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று, அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இன்றைய...