Category: Daily Manna

இது கடவுள் ஆணை… கடைப்பிடிக்கனும்

மத்தேயு 23:13-22 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் பொய்கள் மலிந்துவிட்டன. ஆகவே பொய்யை மறைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த சிலர் கண்டுபிடித்தது தான் இந்த ஆணை. ஆணை இடுதல் என்பது பொய்யை வித்தியாசமான விதத்தில் உண்மையாக்குவது. இப்படிப்பட்ட சூழலில் வசிக்கும் நமக்கு வாழ்வு கொடுக்கும் இறைவார்த்தை ஆணையிடுவது அவசியமற்றது. அது இனி வேண்டாம் மிகவும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்கிறது. ஆகவே கேளீர்.. கேளீர்… ஆணையிடும் போது இரண்டு விதமான ஆபத்துக்கள் வழக்கமாக நேரிடுகின்றன. ஆபத்து 1: உண்மை இறக்கிறது உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. அதற்காகவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்.என்று சொன்ன நம் பெருமான் இயேசுவின் இலக்கு உடைகிறது. உண்மை இறக்கிறது. பொய் வாழ்கிறது. ஆகவே...

நீங்கள் கண்டுபிடித்தது கடவுளையா? அலகையையா?

யோவான் 6:60-69 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அன்புமிக்கவர்களே! உங்களுக்கு அலெக்சாண்ட்ரோ பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றி பற்றி நினைவு இருக்கிறதா? தூய மரிய கொரற்றியின் வாழ்க்கயைில் வருபவர் தான் அலெக்சான்ட்ரோ. நமக்கு நன்றாகத் தெரியும் தூய மரிய கொரற்றி ஓர் கன்னிகை, மறைசாட்சி. வாழ்ந்த காலம் கி.பி.1890-1902. இவர் 12 வயதில் புது நன்மை வாங்கிய பிறகு ஐந்து வாரங்கள் கூட ஆகவில்லை . அலெக்சாண்ட்ரோ ஸெரனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான் . மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார் . ஒரு பாவம் செய்வதைவிட சாவதுமேல் என்பதை நன்கு தெரிந்திருந்தாள் . அலெக்சாண்ட்ரோ பாவத்துக்கு இணங்க மறுத்த...

பெரியவர் தகுதி: பந்தாவா? பணியா?

மத்தேயு 23:1-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “வெட்டி பந்தா வேஸ்ட்” என்பது தொலைக்காட்சியில் நாம் பார்த்த ஒரு விளம்பரம். பந்தா செய்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வர முடியாது. செல்வாக்கு நிரம்பிய பெரிய ஆளாகவும் அவர்கள் மாற முடியாது. பின் யார்தான் செல்வாக்கு படைத்த பெரிய மனிதராக மாற முடியும். அதை நற்செய்தி வாசகம் நறுக்கென சொல்கிறது. பணி செய்கிறவர்களே விண்ணரசில் பெரியவராக கருதப்படுவார். அவர்கள் என்றும் அழியாமல் இருப்பார்கள். அவர்கள் பலர் மத்தியிலும் மனங்களிலும் வாழ்வார்கள். அவர்களின் செல்வாக்கு அவர்கள் சென்றாலும் செல்லாது. இந்த பணியில் இவர்கள் செய்யக் கூடாதவைகள் இரண்டு 1. தங்களை உயர்த்தக் கூடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருபோதும் தங்களை உயர்த்திக்...

புனித பர்த்தலொமேயு திருவிழா

இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்… யோவான் 1:45-51 இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை. இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது. முயற்சி 1: அவரோடு அமர்ந்தார் ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர்...

திருவிருந்துக்கு தினமும் செல்கிறீர்களா?

மத்தேயு 22:1-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் இத்திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உடலுக்கு தினமும் உணவு உண்கிறோம். மூன்று வேளை உணவு உண்கிறோம். ஏதாவது நோய் என்றால் மருத்துவரை சந்திக்கிறோம். இப்படி உடலை மிகவும் கவனமாய் கவனிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் உடலைக் கவனிக்கிற நீங்கள் ஆன்மாவை கவனித்தீர்களா? ஆன்மாவிற்கான உணவு வழங்கினீர்களா? என்ற கேள்விகளோடு வருகிறது. திருமண விருந்து என்பது திருவிருந்து திருமண விருந்தாகிய திருவிருந்துக்கு நாம் எல்லோருமே அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்மில் பலர் பல சாக்குப்போக்குகளைக் கூறுகிறோம். கடவுள்தான் 24 மணிநேரத்தை கொடுத்தது அவருக்கு ஒரு அரை மணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் கொடுக்க நம்மால் இயலவில்லை. பெரும்பாலும் வார திருப்பலிக்கு வருவதில்லை. இது சரியா? திருத்தலாமா நம்மை. தினமும் ஆன்மாவிற்கு...