Category: Daily Manna

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை இல்லாத உலகமடா – என்று ஒரு பாடல் வரிகளில் வார்த்தைகள் வரும். இந்த உலகத்தில் நாம் இழந்துவிட்ட முக்கியமான மதிப்பீடு இந்த சகிப்புத்தன்மை. நமது முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். கூட்டுக்குடும்பமாக வாழ்வது என்பது எளிதான காரியம். இன்றைய நடைமுறையில் அது சாத்தியப்படாத ஒன்று. ஆனால், வாழமுடியாத ஒன்றல்ல. குடும்பங்கள் சேர்ந்திருப்பது மிகப்பெரிய பலம். அதில் கிடைக்கக்கூடிய நிறைவும் பெரிது. கூட்டுக்குடும்பம் வெற்றிபெற, சகிப்புத்தன்மை மிக, மிக அவசியம். அந்த சகிப்புத்தன்மை தான், வெற்றியின் திறவுகோலாக இருந்தது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால், சீடர்கள் அந்த நகரங்களை அழித்துவிடக்கூடிய அளவுக்கு கோபமாக இருந்தனர். ஆனால், இயேசு அவர்களுக்கு சகிப்புத்தன்மையை கற்றுக்கொடுக்கிறார். வாழ்வின் பலகட்டங்களில் நாம் பொறுமையோடு வாழ்கிறபோதுதான், சகிப்புத்தன்மையோடு வாழ்கிறபோதுதான், நாம் வெற்றிபெற முடியும் என்பதை, இயேசு தனது வாழ்வால் சீடர்களுக்கு புரியவைக்கிறார். இன்றைய காலகட்டத்தில், சகிப்புத்தன்மை தவறான வழியில் புரிந்து கொள்ளப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது அடிமைத்தனம் அல்ல. மாறாக, சங்கடங்களை அனுசரித்து வாழப்பழகிக்கொள்வது....

அதிகாரவர்க்கத்தின் போலித்தனம்

திருத்தூதர் பணி 12: 1 – 11 திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. “திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக, அவர்களை சட்டத்திற்கு...

இயேசுவின் திரு இதயம் !

இன்று நாம் இயேசுவின் திரு இதயத்துக்கு விழா எடுக்கிறோம். இதயம் என்பது அன்பின் அடையாளம். பரிவின் வெளிப்பாடு. இயேசு பரிவும், கனிவும் நிறைந்த இதயத்தவராக இருந்தார். எனவேதான், என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், நான் இதயத்தில் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று மொழிந்தார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் இதயம் கல்லானதாக மாறிவிட்டதாக, யாவே இறைவன் குறைப்பட்டார். எனவேதான், கல்லான இதயத்தை மாற்றிவிட்டு, கனிவான இதயம் தருவதாக எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். அந்த வாக்குறுதி இயேசுவின் திரு இதயத்தில் நிறைவு பெற்றது. இயேசுவின் இதயம் ஏழைகள், பாவிகள் என ஒதுக்கப்பட்டோர், ஊனமுற்றோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் போன்ற ஓரங்கட்டப்பட்ட அனைவருக்காகவும் துடித்தது, அழுதது, பரிவு கொண்டது. அந்த இதயம் இன்றும் நம்மீதும் பரிவு கொள்கின்றது. நமது குறைபாடுகள், பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் ஒரு தாயின் இதயம் போன்று பாசத்துடன் பார்த்து, மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்கிறது. அந்த இதயத்துக்காக நாம் நன்றி கூறி,...

செயல்பாடுள்ள கிறிஸ்தவர்கள்

இயேசு வாழ்ந்த காலம் புதுமைகளுக்கு பெயர் போன காலம். பல போதகர்களால் புதுமைகளும் அற்புதங்களும் அரங்கேறின. புதுமைகள் பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருந்தன. பல நோய்கள் உளவியல் நோய்களாக இருந்தன. கடவுளின் பெயரைச்சொல்லி வேண்டுகிறபோது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, பல பேருக்கு சுகத்தை கொடுத்தது. இந்த பிண்ணனியில் தான், நாம் இந்த நற்செய்தி வாசகத்தைப் புரிந்து கொள்ள முடியும். தொடக்ககால திருச்சபை தலைவர்கள், புதுமைகளை மறுக்கவில்லை. தொடக்ககால திருச்சபையில் இயேசுவை நம்பாத சிலரும், உதட்டளவில் இயேசுவின் பெயரைச் சொல்லி, பல பேய்களை ஓட்டினர். ஆனால், கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெயரைச் சொல்லி காரியம் சாதிக்கிறபோது, அதற்கான விளைவை, அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயேசு கொடுக்கிற எச்சரிக்கை செய்தி. புதுமைகள் செய்வதனாலோ, கடவுளின் பெயரால் காரியங்கள் சாதிப்பதனாலோ, ஒருவர் கடவுளுக்கு உகந்தவர் ஆகிவிட முடியாது. கடவுளுக்கு ஒருவர் உகந்தவர் ஆக வேண்டுமென்றால், கிறிஸ்தவத்தை முழுமையாக வாழ முயற்சி எடுக்க...

இறைவன் வாக்குறுதி மாறாதவர்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7, 8 – 9 இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்கிற சிந்தனையை திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். வாக்குறுதி என்பது என்ன? ஒரு மனிதர் சக மனிதருக்கு “இதைச் செய்கிறேன்” என்று, உறுதி செய்வது தான், வாக்குறுதி. சொல்கிற வாக்கை நிறைவேற்றுவது வாக்குறுதி. இறைவன் பல வாக்குறுதிகளை, தான் படைத்த மனிதர்களுக்கு வழங்கியிருக்கிறார். தொடக்க நூலில் நாம் பார்க்கிற முதல் மனிதரிலிருந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நோவா என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. வாக்குறுதி கொடுத்த மனிதர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து தவறியிருக்கிறார்கள். ஆனால், கடவுள் ஒருபோதும் தவறியது கிடையாது. கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை நிர்பந்தமான வாக்குறுதிகள், நிர்பந்தம் இல்லாத வாக்குறுதிகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நிர்பந்தமான வாக்குறுதி என்பது, மனிதன் இதைச்செய்தால், கடவுளும் செய்வதற்கு கட்டுப்பட்டவர் என்பது பொருள். கடவுள் அனைத்தையும் கடந்தவர் என்றாலும்,...