Category: Daily Manna

ஆண்டவர் தம் செயல்களை மக்கள் அறியச்செய்யுங்கள்

திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7 இன்றைய திருப்பாடல், கிறிஸ்தவனின் முக்கியமான கடமையை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதுதான் ”அறியச்செய்வது”. “அறியச்செய்வது“ என்றால் என்ன? நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு அறிவிப்பது, தெரியப்படுத்துவது. எதனை அறியச்செய்ய வேண்டும்? என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இறைவன் செய்திருக்கிற இரக்கச்செயல்களை, அற்புதங்களை, வல்ல செயல்களை மற்றவர்கள் அறியச்செய்யுங்கள் என்பது, ஆசிரியரின் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது? கடவுளை அறிந்தவர்கள் அனைவருமே இந்த நற்செய்திப்பணியில் ஈடுபட அழைப்புவிடுக்கப்படுகிறார்கள். இன்றைக்கு நாம் வாழும் உலகில், மக்களின் அறிவை மழுங்கடிப்பதிலும், மக்கள் எதையும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதிலும் நம்மை ஆளக்கூடியவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி மக்கள் விழிப்புணர்வு அடைகிறபோது, அதனை திசை திருப்ப, மக்களின் நாட்டுப்பற்றை தங்களுக்குச் சாதகமாக்கி, பிரச்சனையை திசைதிருப்பி விடுகிறார்கள். தங்களது பாக்கெட்டை நிரப்புவதற்காக, மக்களை காவு கொடுக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு...

உன் உள்ளத்து விருப்பங்களை ஆண்டவர் நிறைவேற்றுவார்

திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40 கடவுளிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய திருப்பாடல் சிறந்த சான்றாக அமைகிறது. இது வெறும் வார்த்தையாக எழுதப்பட்டது அல்ல. தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுதப்பட்ட அமுதமொழிகள். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், வெகு விரைவில் கடவுள் மீதான தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்கிற அற்ப எண்ணம். தான். கடவுள் மீது வெறுப்பு கொள்வதற்கு பதிலாக, நம்முடைய வாழ்வை நாம் சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, முதலில் அவரை நம்ப வேண்டும். அதைத்தான் இன்றைய முதல் அனுபல்லவி நமக்கு அறிவுறுத்துகிறது, ”ஆண்டவரை நம்பு”. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையாக இல்லாமல், இறைவனை முழுமையாக அனுபவிக்கக்கூடிய உறுதி...

உம்மையே நம்பும் எங்கள் மீது உம் பேரன்பு இருப்பதாக!

திருப்பாடல் 33: 2 – 3, 10 – 11, 18 – 19 கடவுளைப் போற்றுவதும், புகழ்வதுமே இந்த திருப்பாடலின் நோக்கம். இந்த திருப்பாடல் “யாவே“ இறைவனை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள பாடல். யாவே இறைவனை நேர்மையாளர்கள் அனைவரும் புகழ வேண்டும் என்கிற விண்ணப்பத்தோடு இந்த பாடல் தொடங்குகிறது. கடவுள் மக்களால் மகிமைப்படுத்துவதற்குரியவர். ஏனென்றால் பரந்து விரிந்திருக்கிற இந்த உலகத்தை அவர் தன்னுடைய வல்லமையினால் படைத்தார். இந்த உலகத்திலிருக்கிற அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுத்தவர் கடவுளே. எனவே, நாம் எப்போதும் கடவுளைப் போற்றுதற்கு தயாராக இருக்க வேண்டும். தன் மக்களின் எதிரிகளுக்கு எதிரான சதித்திட்டங்களை ஆண்டவர் முறியடித்து எப்போதும் வெற்றியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார். இறைவன் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை வழிநடத்த அவர் மேற்கொள்ளக்கூடிய எல்லாவகை திட்டங்களையும் இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இதே சிந்தனை இன்றைய நற்செய்தியிலும் வெளிப்படுகிறது. இயேசு தன்னுடைய பணியை தொடர, திருத்தூதர்களை அழைக்கிறார். இந்த...

நேர்மையில் நிலைத்திருந்து ஆண்டவரின் முகம் காண்பேன்

திருப்பாடல் 17: 1, 2 – 3, 6 – 7, 8, 15 தன்னுடைய எதிரிகளின் சூழ்ச்சிகளாலும், தொடர் தேடுதல் வேட்டையினாலும் பெருத்த மன உளைச்சலுக்கும், விரக்திக்கும் ஆளாகியிருக்கிறார் தாவீது மன்னர். எங்கே தப்பிச்சென்றாலும், நிழல் போல தன்னுடைய எதிரிகள் தன்னை பின்தொடர்வதைக் கண்டு, மனம் வெதும்புகிறார். வேதனையின் உச்சத்திற்கே செல்கிறார். சாதாரண மனிதனாக, தன்னால் வாழ முடியவில்லையே என்று வேதனைப்படுகிறார். விரக்தியின் விளிம்பில் அவர் கடவுளை நோக்கி கூக்குரலிடுகிறார். இறைவனுடைய பாதுகாப்பிற்காகவும், புகலிடத்திற்காகவும் வேண்டப்படுகின்ற பாடலாக இது அமைந்திருக்கிறது. கடவுளிடம் தன்னுடை விண்ணப்பத்தை எடுத்துரைக்கிறபோது, தன்னுடைய நேர்மைத்தனத்தை அவர் விவரிக்கிறார். இவ்வளவு சூழ்ச்சிகள், வேதனை, நெருக்கடி, துன்பங்களுக்கு நடுவிலும், தான் கொண்டிருக்கிற நேர்மைத்தனத்தில் நிலைத்திருக்கும்படியாக ஆண்டவரிடத்தில் மன்றாடுகிறார். நேர்மையாக வாழ்ந்ததற்கு பரிசு கிடைக்கவில்லையே என்று தாவீது மனம் வெதும்பவில்லை. அழுது புலம்பவில்லை. இறைவனிடத்தில் முறையிடவில்லை. மாறாக, தன்னுடை நேர்தை்தனத்தில் தொடர்ந்து வளர, உறுதியாக இருக்க வேண்டுகிறார். தன்னுடைய எதிரிகளிடமிருந்து...

தம் சிறகுகளால் நம்மை அரவணைப்பார்

திருப்பாடல் 91: 1 – 2, 3 – 4, 14 – 15 இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு இறைவன் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருப்பார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது. இங்கே இறைவனே பேசுவதாக, திருப்பாடல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இறைவன் என்ன பேசுகிறார்? தன்னை அன்பு செய்கிறவர்களுக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதுதான், இறைவனுடைய கூற்றாக இருக்கிறது. இறைவன் தன்னை முழுமையாக நம்புகிறவர்களுக்கும், தன்னை நோக்கி மன்றாடுகிறவர்களுக்கும் எப்படியெல்லாம் உதவி செய்யப்போகிறார் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கமாகக் கூறுகிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு அறிவிக்கிறது. இயேசு தொழுகைக்கூடத்தலைவரின் மகளையும், பல ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணையும், அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் மிகுதியினால் காப்பாற்றினார் என்பது, இங்கே நமக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. ஆக, கடவுளை நம்பினோர் எப்போதுமே கைவிடப்பட மாட்டார்கள் என்பது, இங்கே தெளிவாகிறது. நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் கடவுளை தேடுகிறவர்களாக...