Category: Daily Manna

இகழ்ச்சி இன்றிலிருந்து இருக்காது…

லூக்கா 1:5-25 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். செக்கரியா – எலிசபெத்து தம்பதியினர் பிள்ளை இல்லாமல் மிகவும் இகழ்ச்சிக்குள்ளாயிருந்தனர். அக்கம் பக்கத்தார் அவர்களை அதிகம் வார்த்தைகளால் குத்தினர். அவர்கள் மனம் பாரமாக இருந்தது. அந்த பாரத்தை, அந்த இகழ்ச்சியை ஆண்டவர் நீக்குவதை இன்றைய நற்செய்தி வாசகம் நம் கண்முன் வைக்கிறது. அவர்களின் இகழ்ச்சியை நீக்கிய ஆண்டவர் நம் இகழ்ச்சியையும் நீக்குவார் என்ற ஆசீர்வாதத்தையும் வழங்குகிறது இன்றைய வழிபாடு. அதற்காக நாம் மனதில் நிறுத்த வேண்டிவைகள் இரண்டு: 1. கடவுள் மறப்பதில்லை பல நாட்கள் கடந்திருக்கலாம். ஆனால் நாம் கேட்டது கண்டிப்பாக நடக்கும். நாட்கள் கடந்துபோய்க்கொண்டிருக்கிறதே கிடைக்குமா? என்று நினைக்க வேண்டியதில்லை. செக்கரியா – எலிசபெத்து தம்பதியனர் ஏற்கனெவே...

ஏற்றுக்கொள்ளுதல்

யோசேப்பு கனவில் தனக்கு சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மரியாவை ஏற்றுக்கொண்டார் என்று நற்செய்தி சொல்கிறது. “ஏற்றுக்கொள்ளுதல்” என்பது நமது வாழ்வின் முக்கியமான பண்பு என்றால் அது மிகையாகாது. யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி இது. உதாரணமாக, யோசேப்பின் வாழ்வில் நாம் நடந்ததைப் பார்ப்போம். யோசேப்புவிற்கு மரியா திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் கூடிவாழும் முன் மரியா கருவுற்றிருக்கிறார். இதனை நமது வாழ்வோடு நாம் தொடர்புபடுத்திப் பார்ப்போம். நமக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற ஒரு பெண், திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருக்கிறாள் என்கிற செய்தி கேள்விப்பட்டால், நாம் செய்வது என்னவாக இருக்கும்? உடனடியாக திருமணத்தை நிறுத்துவோம். பெண் வீட்டாரை ஏளனம் செய்வோம். மற்ற ஒன்றுமே நமது எண்ணத்திற்குள் வராது. ஆனால், யோசேப்பு அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அது அவரது பெருந்தன்மை அல்ல, மாறாக, நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய திறன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாம் ஒன்றை...

மூதாதையரை நினையுங்கள் இன்று…

மத்தேயு 1:1-17 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை நமக்கு வழங்குகிறது. இது நம் மூதாதையர்களின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. அவர்கள் இன்றி நாம் இங்கில்லை. ஆகவே இன்று நம் மூதாதயரை நாம் நினைக்க வேண்டும். நினைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் இரண்டு செயல்களிலும் இறங்குவது இன்றைய நாளுக்கு அதிக பலத்தைக் கொடுக்கும். 1. அவர்களைப் போல்… அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை நாம் நினைத்துப் பார்த்து அதைப் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்த நல்ல படிப்பினைகளை, வாழ்க்கை முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் மூதாதையரின் வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தார். அவர்களிடமிருந்த பண்புகள் அவரிடமும்...

இயேசுவின் நிறைவான வாழ்வு

திருமுழுக்கு யோவான் பல அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் செய்தார் என்பதை விட, அவருடைய வலிமையான போதனை தான், மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்த அளவுக்கு அவருடைய வார்த்தைகள் மக்களின் மனதை துளைத்து, அவர்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் சென்றது. மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இயேசு இந்த போதனையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறார். இயேசுவின் போதனையைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த ஆளுமையின் பரிமாணமாக காணப்படுகிறது. அவரது போதனையும் சரி, அவர் செய்த புதுமைகளும் சரி, இதனைவிட சிறப்பாக, அவருடைய வாழ்க்கை மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஏழை, எளியவர்களையும் சமமாக மதிக்கிறார். மக்கள் நடுவில் வாழ்கிறார். அதே வேளையில், தனது மதிப்பீடுகளை எதற்காகவும் இழப்பதற்கு அவர் தயாரில்லை. வெறும் வார்த்தையால் மட்டுமல்ல, தனது வாழ்வாலும் போதிக்கிறார். தன்னை எதற்காக, இறைத்தந்தை அனுப்பினாரோ, அதனை அப்பழுக்கு இல்லாமல் செய்து முடிப்பதை அவர் இலக்காகக் கொண்டு வாழ்கிறார். நமது வாழ்க்கையில் நாம் செய்வதற்கென்று நமக்கு...

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை

திருமுழுக்கு யோவானைப் பற்றிய சான்று பகர்தலின் வெளிப்பாடு தான் இன்றைய நற்செய்தி வாசகம். திருமுழுக்கு யோவான் மனமாற்றத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தவர். மக்கள் மனம்மாற வேண்டும், மக்களை ஆளும் மன்னன் மனம்மாற வேண்டும். தீய வழிகளை விட்டுவிட்டு, கடவுளின் அரசில் அவர்கள் நுழைய வேண்டும் என்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். அதற்காக தவவாழ்க்கையை வாழ்ந்தவர். அவரைப்பற்றி இயேசு மக்களுக்குப் போதிக்கிறார். பொதுவாக இயேசு தனது போதனையில் தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ மிகுதியான வார்த்தைகளைப் பேசுவது கிடையாது. வெறும் பெயருக்காகவோ, புகழுக்காகவோ, தற்பெருமைக்காகவோ இயேசுவின் போதனை அமைந்தது இல்லை. ஆனால், இன்றைய நற்செய்தியில் அப்படிப்பட்ட இயேசு, திருமுழுக்கு யோவானைப் புகழ்ந்து கூறுகிறார் என்றால், எந்த அளவுக்கு யோவானின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை இது வெளிக்காட்டுகிறது. இது இயேசு, யோவானுக்கு கொடுத்த மணிமகுடம். யோவானின் நல்ல வாழ்வை, தவ வாழ்வை, புனிதமிக்க வாழ்வை அங்கீகரிப்பதற்கான போதனை. நமது வாழ்வில் நல்லது செய்கிறவர்களையும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான வாழ்வை...