இயற்கையைப் பாதுகாப்போம்
இயற்கை நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிற வரப்பிரசாதம். மரங்களும், விலங்குகளும் இயற்கையோடு இணைந்தவை. அவை நமக்கு சில அடையாளங்கள் வழியாக பல செய்திகளைத் தருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. குறிப்பாக, மரங்கள் செழித்து வளர்வது, இலைகளை உதிர்ப்பது, காய் காய்ப்பது, கனி தருவது என்பதான ஒவ்வொரு செயலும், பருவநிலைகளைப்பற்றிய செய்திகளின் வெளிப்பாடாகத்தான் இருக்கிறது. ஒரு மரத்தை வைத்தே, காலத்தையும், நடக்க இருக்கிற நிகழ்வுகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும். அப்படித்தான் இன்றைய நற்செய்தியிலும், அத்திமரத்தை வைத்து, இயேசு நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார். இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் இயேசுவின் வாழ்வு என்றால் அது மிகையல்ல. இயேசு இயற்கையை அதிகமாக நேசித்தார். இயற்கையை வைத்தே பல செய்திகளை, இறையாட்சியைப் பற்றிய கருத்துக்களை மக்களுக்கு வழங்கினார். இன்றைய நவீன உலகில் மனிதன் இயற்கையை விட்டு எங்கோ சென்றுவிட்டான். அதன் பலனையும் அதற்காக அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். புதுப்புது நோய்கள், மனக்குழப்பங்கள், மன நலன் சம்பந்தப்பட்ட...