Category: Daily Manna

ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 3 – 4, 5 – 6, 7 – 8 கடவுளின் மாட்சிமையையும், சிறப்பையும், மாண்பையும் எடுத்துக்கூறக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுளின் பெயர் இந்த உலகம் முழுமையும் மேன்மையாய் விளங்குகின்றது. எப்படி? கடவுளின் படைப்பு, அவரின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற படைப்பு ஒவ்வொன்றுமே ஆச்சரியமூட்டக்கூடியது. அவ்வளவு மகிமையான படைப்புக்களை கடவுள் படைத்திருக்கிறார். எங்கு நோக்கினும் கடவுளின் படைப்பு தான், நம் கண்களுக்கு வியப்பாய் இருக்கிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு வியப்பாக எடுத்துக்கூறுகிறார். கடவுளின் படைப்பு மட்டுமல்ல, இந்த படைப்பு முழுவதையும் மீட்டெடுக்க நம் ஆண்டவர் வகுத்த மீட்புத்திட்டமும் வியப்புக்குரியவை. அந்த மீட்பை எடுத்துரைப்பதற்காக, கடவுளின் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக பக்குவப்படுத்துகிற இயேசுவின் உறுதியான முயற்சி இன்றைய நற்செய்தியில் வெளிப்படுகிறது. கடவுளின் அன்பும், இரக்கமும் தான், மக்களை மீட்புப்பாதையில் கொண்டு செல்ல உதவும் என்பதையும், வெறும் சட்டங்களை வைத்து, நாம்...

“SEPARATE YOURSELVES” (2 COR 6:17)

“God then separated…” –Genesis 1:4 God’s original creation involved multiple acts of separation (Gn 1:4, 6, 7, 14, 18). God’s separations were “good” (Gn 1:12, 18). God’s new creation in Christ also involves multiple acts of separation. In His new creation, the Lord separates us from: • original sin and its loss of intimacy with God through the Sacrament of Baptism (Gn 3:23; Catechism, 1263), • our sins through the ministry of Jesus (Mt 1:21), • those who would lead us away from Him, even if it might be a member of our own family (Mt 10:35), and • our...

இயேசுவுடனான நமது நெருக்கம்

தொழுகைக்கூடத்தில் சுற்றியிருந்த அனைத்து மக்களும் இயேசுவை ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவ்வளவு காலம், தீய ஆவிகள் என்றாலே, போதகர்களே பயந்து நடுங்கிய நாட்களில், இவ்வளவு துணிச்சலாக, போதனைப்பணிக்கு வந்து சிலநாட்கள் கூட ஆகாத, தச்சரின் மகன், நமக்கெல்லாம் அறிமுகமானவர், இவ்வளவு துணிவோடு போதித்து, தீய ஆவியை விரட்டக்கூடிய வல்லமை பெற்றிருக்கிறாரே? நிச்சயமாக இது பாராட்டப்பட வேண்டும். அவரிடத்தில் இருக்கிற சக்தி, அளப்பரியதுதான். இது போன்ற எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தான், இயேசு தனது சீடரின் வீட்டிற்குச் செல்கிறார். இயேசு நிச்சயமாக, பேதுருவின் வீட்டிற்கு உரிமையோடு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால், அவர் தொழுகைக்கூடத்தில் போதித்திருக்கிறார். சற்று இளைப்பாற அவர் நினைத்திருக்கலாம். ஆனால், நிச்சயமாக, பேதுருவின் மாமியார் உடல்சுகவீனம் இல்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால், இயேசு வீட்டிற்குள் நுழைந்தபிறகுதான், அவருடைய சீடர்கள் பேதுருவின் மாமியார் உடல் சுகவீனம் இல்லாமல் இருப்பதை அறிவிக்கின்றனர். இயேசுவோடு...

தனிமையில் தன்னிலை உணர… மாற்கு 6:30-34

உடலினை உறுதி செய்ய ஆயிரம் வலிகள் இருக்கின்றன. ஆனால் உள்ளத்தை, ஆன்மாவினை வலிமையாக்க தனிமையினால் மட்டுமே முடியும். தனிமை என்பது தன்னிலே இனிமைக் காண்பது. தனிமையிலே தன்னிலையை உணர்வது. இயேசு இன்றைய நற்செய்தியில் மக்களிடம் பணி செய்துவிட்டு வந்த தன் சீடர்களிடம் தனிமையில் சென்று ஒய்வெடுக்க சொல்கிறார். அந்த ஒய்வு எடுத்தலினை தனிமையாயிருக்க யாருமே இல்லாத ஒரு பாலை வனத்துக்கு சென்று ஒய்வு எடுக்க சொல்கிறார். தனிமையில் மட்டுமே நம்மை நாமே சீர்; தூக்கி பார்க்க முடியும், ஆராய முடியும். உண்மையிலே சொல்ல வேண்டுமென்றால் தனிமை நமக்கு பல விடயங்களை கற்று தருகிறது. இந்த தனிமையில் நாம் ஏறெடுக்கின்ற இந்த உள்ளொளிப் பயணம் துறவறத்துக்கு மட்டுமல்ல. இல்லறத்தை நல்லறமாக்க மிகவும் தேவைப்படுகின்றது. மேலும் இன்றையய நற்செய்தி நல்ல தலைவன் என்பவர் எப்படி இருக்க வேண்டுமென்றும் நம் இயேசு நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார். சீடர்களைத் நாடி வந்தவர்களை அவர் சந்திக்கிறார். தன்...

ஆண்டவரே என் ஒளி

திருப்பாடல் 27: 1, 3, 5, 8 – 9 ”இருளைப் பழிப்பதை விட ஒளியேற்றுவதே மேல்“ என்று பொதுவாகச் சொல்வார்கள். நாம் அனைவருமே இந்த உலகத்தில் நடக்கிற அநீதிகளைக் கண்டு பொங்கி எழுகிறோம். நமக்குள்ளாகப் பொருமிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிலையை மாற்றுவதற்கு நாம் ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்துவது கிடையாது. காரணம், நாமே அநீதி செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நமக்கொரு நீதி, அடுத்தவர்க்கொரு நீதி என்று பேசக்கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஆண்டவரே என் ஒளி“ என்கிற திருப்பாடலின் வரிகள், நமது வாழ்விற்கு ஒளி தருவதாக அமைந்திருக்கிறது. ஆண்டவரை எதற்காக திருப்பாடல் ஆசிரியர் ஒளிக்கு ஒப்பிட வேண்டும்? இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் ஒளி என்பது, கடவுளின் வல்ல செயல்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை வனாந்திரத்தில் பகலில் மேகத்தூணைக்கொண்டு அவர்களுக்கு நிழல் கொடுத்தார். இரவில் அவர்களுக்கு ஒளியாக இருந்து இருளிலிருந்து பாதுகாத்தார். கடவுளின் ஒளியை நாம் பெற்று, நாம் மற்றவர்களுக்கு...