Category: Daily Manna

உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்

திருப்பாடல் 31: 4 – 5, 13, 14 – 15, 16 தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிற ஒரு நம்பிக்கையாளரின் செபம் தான் இந்த திருப்பாடல். துன்பங்களுக்கான காரணத்தை அவரே ஏற்றுக்கொள்கிறார். அவர் செய்த தவறுகள் தான், இப்போது துன்பங்களாக அவர் முன்னிலையில் வந்திருக்கிறது. கடவுளை விட்டு விலகிய அவரது தவறு தான், இன்றைக்கு மிகச்சிக்கலான கண்ணியில் அவரை சிக்க வைத்திருக்கிறது. இந்த சிக்கலிலிருந்து தன்னை விடுவிக்கக்கூடியவர் கடவுள் மட்டும் தான், என்று அவர் தீவிரமாக நம்புகிறார். அந்த நம்பிக்கையை செபமாக எழுப்புகிறார். கடவுளிடத்தில் அவருடைய அருளை வேண்டுவதற்கு தகுதியில்லாத நிலையில் இருப்பதாக, ஆசிரியர் நினைக்கிறார். ஏனென்றால், கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் மறந்து அவர் வாழ்ந்திருக்கிறார். இப்போது கடவுளிடத்தில் தேவைக்காக திரும்பி வந்திருக்கிறார். அவர் கடவுளின் அருளைப் பெற தகுதியற்ற நிலையில் இருக்கிறார். தகுதியற்ற நிலையில் இருக்கிற அவருக்கு, கடவுள் தன்னுடைய அன்பை வழங்கினால் மட்டும் தான், இந்த துன்பத்திலிருந்து...

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை. தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள்...

அவருக்குரிய ‘ஒன்று’

லூக் 6 : 36 -38 இத்தவக்காலத்தில் மட்டுமல்லாது நம் ஒவ்வொரு ஆன்மீக முயற்சியும் பயிற்சியும் நம்மை புனித நிலைக்கு அழைத்துச் செல்வதே குறியாக இருக்கின்றது. கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்த இறைமகனின் நோக்கமே, மனித நிலையிலிருந்த நம்மை அவருடைய மாண்புமிக்க, மாட்சிமிகுநிலைக்கு உயர்த்துவதே. புனித அத்தனாசியூஸ், “நாம் அனைவரும் அவரின் தெய்வீகத்தில் பங்கு பெறவே அவர் மனிதரானார்.” ;என்கிறார். பாவத்தைத்தவிர அனைத்திலும் அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15) என்று இறைவார்த்தையும் கூறுகின்றது. திருப்பலியில் திருத்தொண்டர் சொல்லக்கூடிய முக்கியமான செபங்களில் ஒன்று இயேசு மனிதனாக வந்த நோக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைக்கின்றது. காணிக்கைப் பொருட்களை திருப்பலியில் படைக்கும் பொழுது இரசத்தோடு ஒரு சொட்டு நீரினை சேர்க்கும் பொழுது திருத்தொண்டர் பின்வருமாறு கூறுவார், “கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்கு கொள்ள திருவுளம் ஆனார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறையியல்பில் பங்கு...

கடவுளை அன்பு செய்வோம்

இயேசு தன்னோடு மூன்று சீடர்களை அழைத்துக்கொண்டு உயரமான ஒரு மலைக்குச் செல்கிறார். அந்த மூன்று சீடர்கள் முறையே, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் பன்னிரென்டுபேரை தன்னோடு இருப்பதற்காக சிறப்பாகத் தேர்ந்தெடுக்கிறார். அதிலும் சிறப்பாக, மூன்று பேரை தன்னோடு முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மூன்று சீடர்களின் இயல்பு என்ன? ஏன் அவர்கள் மீது இயேசுவுக்கு இவ்வளவு நம்பிக்கை. விவிலியத்திலே இதற்கு தெளிவான விளக்கம் காணப்படவில்லை என்றாலும், ஓரளவு நம்மால் அதற்கான பதிலைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசு முக்கியமான இடங்களுக்கு அவர்களை அழைத்துச்சென்றது, அவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதால் அல்ல. அவர்களும் பலவீனர்கள் தான். பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். யாக்கோபு மற்றும் யோவான் இயேசுவோடு அதிகாரத்தில் இருப்பதற்கு தங்களது தாயின் மூலம் பரிந்துரைக்கச் செய்கிறார்கள். ஆனாலும், அவர்களை இயேசு தேர்ந்தெடுத்ததற்கு காரணம், அவர்களின் அன்பு. அவர்கள் இயேசுவை முழுமையாக அன்பு செய்தார்கள். அவர்களுடைய...

அன்பே மனிதன்

மத் 5 : 43 -48 ‘அன்பே கடவுள்’ (1யோவான் 4:8) என்பது உண்மையென்றால் ‘அன்பே மனிதன்’ என்று அமைவது தான் நியதி. ஒவ்வொருவரும் கடவுளின் சாயலோடு படைக்கப்பட்டிருக்கிறோம். ‘என் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்கிறார் இயேசு. மனிதனின் நிறைவு என்பது அவன் புனிதனின் நிலையை அடைவதே. அவரின் சாயலோடு படைக்கப்பட்டவர்கள் அவரின் சாயலாகவே மாற வேண்டும். இது சாத்தியமா? சாத்தியமே. எப்படியென்றால், அன்பினால் இது சாத்தியமாகும். நாங்கள் தான் எங்களை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறோமே என்பது போதாமை. மாறாக விண்ணகத் தந்தை எவ்வாறு அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறாரோ அவரைப் போல நாமும் தீயவர்களையும், நமது பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும். அவன் எனது பெயரைக் கெடுத்து விட்டானே! வாழ்வை சீர்குலைத்து விட்டானே! எனக்குரிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விட்டானே! அவனை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்று நினைக்கும் பொழுதெல்லாம்...