தாழ்ச்சி + இடைவிடாத நம்பிக்கை = அருளடையாளம்
யோவான் 4: 43-54 இன்றைய நற்செய்தி நம்மை இறையன்பில் குறிப்பாக அவர் மீது நாம் கொண்டுள்ள இறை நம்பிக்கையே நமக்கு வாழ்வளிக்கும் என்பதை நமக்க வலியுறுத்துகிறது. அரச அலுவலன் இவன் ஏரோது மன்னன் அரண்மனையில் பெரிய பதவியில் இருந்தவன். பல மைல் தூரம் கடந்து இயேசுவினைச் சந்தித்து உயிர்ப்பிச்சைக் கேட்பது அவனின் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை எடுத்துரைக்கிறது. ஆனால் நமது அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் சிறு பதவிகளும், பொறுப்புகளும் கொடுக்கப்பட்டாலே நாம் ஆடுகிற ஆட்டம் அனைவரையும் ஆட்டிவிடுகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லஇ இறைவனுக்கு அடிபணிய மறந்து விடுகிறோம். பதவியை விடுங்கள். இன்று கைநிறைய சம்பாதித்தாலே நான் ஏன் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக அதிகம். பொருளாதாரம் உயர உயர கடவுளுக்கும் மனிதனுக்குமான தூரம் அதிகரிக்கின்றது. மேலும் குணம் தேடி வந்தவரை ஏமாற்றக் கூடிய நிலையில் இயேசுவின் பதில் கூறுகின்றது. இயேசுவின் எரிச்சல் மிகுந்த தொனி அவரை, மனம்,...