பிளவு ஏன்?
(யோவான் 07 : 40-53) “அவரைக் குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது” (யோவான் 7:43) ஆம், நேற்றைய நற்செய்தியின் தொடக்கமாக இன்றைய நற்செய்தியின் சிந்தனை அமைகின்றது. அவருக்குச் சார்பாகவும் எதிராகவும் மக்களிடையே பிளவு ஏற்படுகிறது. இப்பிளவுக்குக் காரணம் இயேசுவா? உறுதியாக இல்லவே இல்லை. மக்களின் முற்சார்பு எண்ணங்களையும், அறியாமையையும், அதிகார வர்க்கத்தினர் மிகவும் சரியாக அவர்களுக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்கின்றனர். கலிலேயர்கள் என்றாலே கலகக்காரர்கள் என்ற முற்சார்பு எண்ணத்தையும், கலிலேயாவில் இயேசு தன் பணிவாழ்வின் பெரும்பகுதியை செலவழித்ததால் அவர் ஒரு கலிலேயன் என்ற முடிவுக்கு வருகின்ற அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும். ‘கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் தோன்றவில்லை’ என்ற எண்ணம் திசை திருப்புபவர்களின் திமிரையும், அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறையையும், படித்தவர்களின் முட்டாள் தனத்தையும் காட்டுகின்றது. இதே நபர்கள் தான் இன்றும் நம்மைப் போன்ற பாமர மக்களின் அறியாமையையும், முற்சார்பு எண்ணத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடவுளுக்கும் எல்லை...