உங்களில் ஒருவன்…!
(யோவான் 13 : 21-33,36-38) ‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இந்த இறைவார்த்தை இன்றுவரை நமது திரு அவையில், பங்குதளத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது. காட்டிக்கொடுப்பதும், முதுகில் குத்துவதும் இன்று நமது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் யூதாசுகள் இன்று பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இன்றுவரை யூதாசைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு. இவற்றை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இன்றைய நற்செய்திக்கும், லூக்கா நற்செய்தியாளரின் ஊதாரி மகன் உவமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பார்க்கிறேன். எவ்வாறு இளையமகன் சொத்துக்களை (இறைவனின் அருள்) பெற்றுக் கொண்டு நெடுந்தொலைவு சென்றானோ (இறைவனை விட்டு வெகு...