Category: Prayers in Tamil
சகலவிதமான ஞாயானத்துக்கும் ,ஊற்றும் இருப்பிடமானவரே,/உம்மை நன்றியோடு புகழ்கின்றோம் ./தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம், விவேகமே தூயவர்களின் அறிவு என்றும் /ஆண்டவரில் உன் இன்பத்தைத் தேடு /அப்போது /உன் நெஞ்சம் நாடுவதை அவர் உனக்குத் தருவார் என்றும் /நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம் ./நாங்கள் ஒவ்வொருவரும் /ஞானத்திலும்/அறிவிலும் சிறந்து/பக்தியும் விசுவாசமும் உள்ள வாழ்க்கை நடத்தும் பொருட்டு எங்களை உம் கண்களுக்கு முன்பாக //மேன்மை மிக்கவர்களாக ./மதிப்புக்குரியவர்களாக படைத்து /எங்கள் ஒவ்வொருவருக்கும் ஞானமுள்ள இருதயத்தைக் கொடுத்திருக்கிறீர்./எங்களுடைய அறியாமையாலும் /பலவீனத்தாலும் /ஞாபகக் குறைவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் /நாங்கள் ஞானத்திலும் அறிவிலும் /குறைவு பட்டவர்களாகவே வாழ்கிறோம்.
Like this:
Like Loading...
பிரேகு நகரக் குழந்தை இயேசுவின் பக்தி இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் பரவியிருந்த ஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திருச்சுரூபம் ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்ததென வரலாறு கூறுகிறது .அரும்பெரும் பரம்பரைச் செல்வமாக தன் குடும்பத்தில் வைத்து பேணிபாதுகாத்து வந்த இத்திருச் சுரூபத்தை மரிய மோரிக்-தெ-லாரா என்னும் ஸ்பெயின் நாட்டு இளவரசி பொலிக்செனா லோகோவிட்ஸ் என்ற தன் மகளுக்கு திருமணப் பரிசாக அளித்தாள். திருமணத்துக்குப்பின் பொகிமியாவிலுள்ள தன் கணவனின் இல்லம் செல்லுகையில் இதை அவள் தன்னுடன் எடுத்துச் சென்றாள்.கி.பி.1623 -ம் ஆண்டில் கணவன் மறைந்த பிறகு எஞ்சிய தன் வாழ்நாட்களை பக்திப்பணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க உறுதிபூண்டு இளவரசி பொலிக்சொனா பிரேகு நகர கார்மேல் துறவியருக்கு இந்த திருச்சுருபத்தை கொடுத்தாள். கொடுக்கும்போது அவள் கூறிய இறைவாக்கு இது உலகிலேயே மிகமிக உயர்வாக நான் மதித்துப் போற்றும் தன்னிகரில்லாத தனிப்பெரும் செல்வமான இந்தச் சுறுபத்தை உங்களுக்குச் கொடுக்கிறேன்.குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள்.குறை...
Like this:
Like Loading...
1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வியாழன் மாலைத் திருப்பலிகளில் பக்தர் ஒருவர் குழந்தை இயேசுவின் சிறிய சுரூபம் ஒன்றை காணிக்கையாக கொடுத்தார்.அன்று முதல் ஒவ்வொரு முதல் வியாழன் அன்று மாலைத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 1990-ஆம் ஆண்டு புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது 14.04.1990 அன்று அற்புதக் குழந்தை இயேசுவின் பெரிய சுரூபம்,இன்னுமொரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டது.அதே வருடத்தில் குழந்தை பாக்கியம் பெற்றதற்காக ஒரு குடும்பம் நன்றியறிதலாக குழந்தை இயேசு சுரூபம் கொடுக்கப்பட்டது.அச்சுறுபம் ஜீபிலி ஆண்டு 2000 நினைவாக கெபி ஒன்று கட்டி அதில் அர்ச்சிக்கப்பட்டது.வியாழன் தோறும் கெபியின் முன்னால் நவநாள் சேபிக்கப்பட்டு அதன்பின் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.அந்த வருடத்திலிருந்து மாதத்தின் முதல் வியாழன் காலை 11.00 மணிக்கு சிறப்புத் திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது.திருப்பலியி ல் நோயாளிகள் நலம் பெறவும் முதியோர்கள் மன அமைதியடையவும்.குழந்தையில்லாதோர் குழந்தை பாக்கியம் பெறவும்,வேலையில்லாத திண்டாட்டம் ஒழியவும்,குழந்தைகள் நற்ப்படிப்பு பெறவும் தீய பழக்கங்கள் ஒழிந்து சமுதாயம் சீர்படவும் தடைப்பட்ட திருமணங்கள்...
Like this:
Like Loading...
மறையுரைக்குப்பின்: அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தர்கள் வேண்டுதல்கள் குருவானவர்:வணகத்தந்தையே! எங்களுக்கு வேண்டியது எல்லாம் உம் மகன் அற்புதக் குழந்தை இயேசு, தம்முடைய பெயராலே அவரை நம்பிக்கையோடு கேட்குமாறு அவரே எங்களுக்கு கற்றும் கொடுத்துள்ளார்.எனவே அதே நம்பிக்கையோடு அவரை நாடி வந்திருக்கும் பக்தர்களின் வேண்டுதல்களை கேட்குமாறு உம்மை மன்றாடுகிறோம். (1)அகில உலக கத்தோலிக்க மக்களை வழிநடத்தும் எம் திருத்தந்தை,ஆயர்கள்,குறிப்பாக எம்மறை மாவட்டதிதில் பணிபுரியும் அணைத்து அருட்பணியளர்கள்,துறவியர்,வேதியர் மற்றும் நற்செய்தி பணியாளர்களை நீர் நிறைவாக ஆசிர்வதித்து எதிர்ப்புகள் இன்னல் இடையுருகள் மத்தியிலும் உம் பணிகளை துணிவுடன் தொடர, அற்புத்தக் குழந்தை எயேசுவே உம்மை வேண்டுகிறோம். எல் :அற்புதக் குழந்தை இயேசுவே எங்கள் மன்றாட்டத்தை கேட்டருளும். (2)நமது இந்திய நாட்டை ஆளும் அனைவரும் நாட்டு மற்றும் மக்கள் நலனையே மையமாக கொண்டு,சுயநலம் தவிர்த்து,மக்கள் முன்னேற்றத்துக்காக பொருளாதார மற்றும் ஆன்மீக நலனை முன்நிறுத்தி அயராது உழைக்க வரமருள அற்புதக் குழந்தை இயேசுவே உம்மை வேண்டுகிறோம். எல் :...
Like this:
Like Loading...
Like this:
Like Loading...