Category: Prayers in Tamil

செபம்

இரக்கத்திற்கான செபம் ஆண்டவராகிய இயேசுவே !எங்கள் மேல் இரக்கம் வையும்.எங்கள் மேல் இரக்கமாயிரும்.எங்களைத் தீர்ப்பிடாதேயும்,எங்கள் மூதாதையரின் எல்லாக் குற்றங் குறைகளையும் பாவங்களையும் மன்னித்தருளும்.எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கிவிடும்.எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும் . (காலையிலும் மாலையிலும் 5 நிமிடம் சாஷ்டாங்கம் செய்து இந்தச் செபத்தைச் சொல்ல வேண்டும் )                                                        இயேசுவின் உதவியை வேண்டிச் செபம் இரக்கமுள்ள இயேசுவே !உம்மை நாங்கள் விசுவாசிக்கிறோம்.உம்மில் நம்பிக்கை வைக்கிறோம் . எங்கள் பலவீனத்திலும் இயலாமையிலும் எங்களுக்கு உதவியாக வாரும்.உம்மை அனைவரும் அறிந்து நேசிக்கும்படி செய்ய எங்களுக்கு வரந்தாரும்.அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது அன்பின் மகிமைக்காகவும்,எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள தீய சக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரந்தாரும் -ஆமென்.                                                        ஆன்மாக்களுக்காகச்    செபம் ஆண்டவரே !உமது எல்லையற்ற அன்பினால் எல்லாப் பாவிகளையும் மன்னித்து உமது நீதியின் வழியில் நடத்திச் செல்லும்.இவர்களைச் சார்ந்தவர்களையும் தீமையின் கொடுமையினின்று...

புனிதத்தில் வாழ

புனிதத்தில் வாழ ( சீராக்கின் ஞானம் 23 :1-6 ) தந்தையாகிய இறைவா! என் வாழ்வின் தலைவரே என் வாய் கூறுவதையெல்லாம் பொருட்படுத்தாதேயும். அவற்றின் பொருட்டு நான் விழ்ச்சியுறாதவாறு செய்தருளும். என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தியருளும். இறுமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் கொடாதிருக்கச் செய்தருளும். தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றியருளும். தகாத விருப்பங்கள் எண்ணங்கள் ஆசைகள் என்னை மேற்க்கொள்ள விடாதேயும். உலக மதிப்பீடுகளுக்கு நான் அடிமையாகாமலும் மனிதனின் பசப்பு வார்த்தைகளை நம்பாமலும் தீய சூழ்நிலைகளுக்குள் வீழ்ந்து விடாமலும் என்னைக் காத்தருளும். என்னை புனிதனாக்கவல்ல உமது தூய ஆவியானவர் எப்பொழுதும் என்மீது அசைவாடி என்னை வழி நடத்துவதை உணரச் செய்தருளும் உமது மீட்பின் கரம் எப்பொழுதும் என்னைத் தாங்கச் செய்தருளும் உம்மையை அறியச் செய்தருளும். தந்தையே உமக்கே நான் சொந்தம். உம்மையே நான் நம்பி வாழ்கிறேன். எந்நாளும் எத்தகைய தீமைக்கும் அடிமையாகாதபடி என்னைக் காத்தருளும். ஆமென்.

இரக்கத்தின் செபமாலை

இரக்கத்தின் செபமாலை  ஆரம்பம் – பரலோக மந்திரம் மங்கள வார்த்தைச் செபம் விசுவாசப் பிரமாணம் பெரிய கற்களில் நித்திய பிதாவே !எமது பாவங்களுக்க்காகவும் உலகின் பாவங்களுக்க்காகவும் பரிகாரம் செய்யும் படியாக ………… உமது நேசக் குமாரனாகிய எமதாண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் ஆன்மாவையும், தெய்வீகத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் . சிறிய கற்களில் இயசுவின் துன்பகரமான பாடுகளை பார்த்து ……. எங்கள்மீது முழு உலகின் மீதும் இரக்கமாயிரும். முடிவு பரிசுத்த தேவனே! வல்லமை மிக்க பரிசுத்த தேவனே! நித்திய பரிசுத்த தேவனே! எங்கள் மீதும் இரக்கமாயிரும். (மூன்றுமுறை )

மாபெரும் இரக்கத்தின் நேரம்

மாபெரும் இரக்கத்தின் நேரம்  “மூன்று மணி வேலையில் சிறப்பாக பாவிகளுக்காக எனது இரக்கத்தை மன்றாடு. என் பாடுகளை சிறப்பாக வேதனையின்போது எல்லாராலும் கைவிடப்பட்ட எனது நிலையை சிறிது நேரம் தியானித்து அந்த நினைவில் மூழ்கு “. அகில உலகுக்கும் மாபெரும் இரக்கத்தின் நேரம் இது. இந்த நேரத்தின் எனது பாடுகளின் பெயரால் இரந்து கேட்கும் ஆன்மாவின் எந்த வேண்டுதலையும் நான் மறுக்க மாட்டேன்.”                                                             செபம்  இயேசுவே ! நீர் உயிர்வீட்டீர். ஆனால் உம்மிடமிருந்து உயிரின் ஊற்று ஆன்மாக்களுக்கு பீறிட்டெழுந்து அகில உலகிற்க்காகவும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது. ஓ! வாழ்வின் சுவையை ஆலங்கானா தெய்வீக இரக்கமே ! நீர் உலகையும் அரவணைத்து உமது இரக்கம் முழுவதையும் என்மீது பொழிந்தருளும். இயேசுவின் இதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே ! தண்ணீரே! உம்மீது  நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.

St Francis Assisi Prayer