† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

எவரது மனதில் வஞ்சம் இல்லையோ அவர் பேறுபெற்றவர்

திருப்பாடல் 32: 1 – 2, 5, 11, (7) குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு எதை கடவுள் அளவுகோலாக வைத்திருக்கிறார்? ஒருவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்திருக்கிறான். தன்னுடைய கடைசி தருணத்தில் அவன் தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறான். அப்படியென்றால், இவ்வளவு நாட்கள் அவன் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை? அவற்றையெல்லாம் கடவுள் பொருட்படுத்த மாட்டாரா? என்கிற எண்ணங்கள் நமக்குள்ளாக எழலாம். இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்வன் வாழ்நாள் முழுவதும் திருடுவதிலும், கொலைக் குற்றத்திலும் ஈடுபட்டவன். அவன் செய்த பாவங்களை ஒரு நொடியில் இயேசு மன்னித்தார் என்றால், அவன் செய்த தவறுக்கான தண்டனை தான் என்ன? இன்றைய திருப்பாடல் அதற்கான பதிலைத் தருகிறது. குற்றமுள்ள நெஞ்சத்தோடு ஒருவனால் கடவுளிடத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. ஒருவேளை அவன் மனிதர்களிடத்தில் நடித்துவிடலாம். ஆனால், கடவுளிடத்தில் ஒரேநாளில் ஒருவனால் நிச்சயம் திருந்திவிட முடியாது. திருப்பாடல் சொல்கிறது: எவரது மனத்தில் வஞ்சம் இல்லையே அவன் பேறுபெற்றவன். வஞ்சத்தோடு கடவுளிடத்தில்...

THE BLOOD THAT JESUS SHED FOR ME

“Now the justice of God has been manifested apart from the law, even though both law and prophets bear witness to it – that justice of God which works through faith in Jesus Christ for all who believe.” –Romans 3:21-22 Prophets had been murdered for thousands of years, “from the blood of Abel to the blood of Zechariah” (Lk 11:51). Yet not one of these murders was atoned for over all this time. Jesus said: “This generation will have to account for the blood of all the prophets shed since the foundation of the world” (Lk 11:50). All the people...

பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு

திருப்பாடல் 130: 1 – 2, 3 – 4, 5 – 6, (7) வாழ்வின் இன்ப துன்ப வேளை, நெருக்கடி என எது வந்தாலும், ஆண்டவரை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டும் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இங்கு தாவீது அரசரின் அனுபவம் வெளிப்படுகிறது. அந்த அனுபவம் இனிமையானது அல்ல, கசப்பானது. அவர் மனிதர்களை நம்பினார். அதிகாரத்தை நம்பினார். தன்னால் எதையும் செய்ய முடியும் என்கிற பலத்தில் நம்பினார். அதற்கான விளைவை அவர் சந்தித்தார். அந்த அனுபவம் அவரை மற்றவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிற வகையில் அமைந்திருக்கிறது. அதுதான் இன்றைய திருப்பாடல். மனிதர்களாகிய நாம் யார் மீது நமது நம்பிக்கை வைக்கிறோம்? நாம் பணக்காரர்களாக இருந்தால், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கிறோம், பணத்தின் மீது நம்முடைய நம்பிக்கையை வைக்கிறோம். நாம் அதிகாரத்தில் இருக்கிறபோது, அதிகாரத்தால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். சமுதாயத்தில் மிகப்பெரிய பதவியில் இருந்தால்,...

“THE FINGER OF GOD” (LK 11:20)

“…but will not lift a finger to lighten them.” –Luke 11:46 Jesus does not show us our sins to condemn us, but to save us (Jn 3:17). He illuminates our sins to show us the damage they have caused, and also to show us how we cannot erase that damage by our own efforts. Only Jesus can pay that price (Is 26:18; Ps 49:8-9). We must allow Him to pay it. Jesus’ standards are even higher than those of the Pharisees and the scholars of the law (Mt 5:18). Jesus is most definitely not lax on sin; He takes sin...

போதனையும், வாழ்வும்

அடுத்தவர்கள் மீது சுமைகளைச் சுமத்துகிற மனிதர்கள் இந்த உலகில் ஏராளம். தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை, சோம்பேறித்தனத்தின் பொருட்டு செய்யாமல், அடுத்தவர்களை ஏவுகிற வேலையைச் செய்கிறவர்களை நாம், அன்றாட உலகில் பார்க்கலாம். அத்தகைய மனிதர்களைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தியும் பேசுகிறது. திருச்சட்ட அறிஞர்களைப்பார்த்து இயேசு இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். திருச்சட்ட அறிஞர்கள் சட்டத்திற்கு விளக்கம் கொடுக்கிறவர்கள். அவர்கள் மக்களுக்கு சட்டங்களை விளக்கிக்கூறுகிறவர்கள். எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்? எதையெல்லாம் பின்பற்றக்கூடாது? என்று, மக்களுக்கு அறிவுறுத்துகிறவர்கள். மக்களுக்கு சட்டங்களைப் பின்பற்றச் சொல்கிற இவர்கள், தாங்கள் சொல்பவற்றை ஒருபோதும் பின்பற்றுவது கிடையாது. ஆனால், மக்கள் பின்பற்றவில்லை என்றால், அதற்கான தண்டனையைச் சுட்டிக்காட்டி, அவர்களின் மீது, தாங்க முடியாத சுமைகளைச் சுமத்திக்கொண்டிருந்தார்கள். தாங்களோ, சட்டங்களை மதிப்பதை ஒரு பொருட்டாக எண்ணியது இல்லை. இந்த வழக்கத்தை இயேசு எதிர்க்கிறார். கண்டிக்கிறார். நமது வாழ்விலும் கூட, மற்றவர்களுக்கு பலவற்றைப் போதிக்கிற நாம், அவர்களை இறைவன்பால் கட்டியெழுப்புவதற்கு பல திட்டங்களைத் தீட்டக்கூடிய...