† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

பூமியெங்கும் உலாவும் தேவன்

அன்பார்ந்த இணையதள உறவுகளுக்கு, பூமியெங்கும் உலாவி வரும் ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். விண்ணையும், மண்ணையும் படைத்த நம் இறைவன் நம்முடைய எல்லா தேவைகளையும் சந்திப்பவராக இருக்கிறார். ஆனால் நாம்தான் அவரிடம் கேட்காமல் நமது விருப்பத்துக்கு செய்துவிட்டு பிறகு மனம் தவிக்கிறோம். அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் உலாவிக்கொண்டே இருக்கிறது. நம்மை பாதுகாக்க வேண்டி அவர் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதும் இல்லை. நமது வலப்பக்கத்தில் எப்பொழுதும் நிழலாய் இருக்கிறார். திருப்பாடல்கள் 121:4,5. ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று வாக்கு அருளுகிறார். அவர்மேலேயே நம் முழுநம்பிக்கையும் வைத்து காத்திருந்தால் நாம் ஆசீவாதத்தை பெற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை. ஏனெனில் உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றது. அவரை நம்புவோருக்கு ஆற்றல் அளிக்கிறார். 2 குறிப்பேடு 16:9. அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. அதனால் உலகெங்கும் வாழ்வோரே! ஆண்டவருக்கு புகழ்பாடுங்கள். அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். மாட்சியை எடுத்துரையுங்கள். அவரின்...

RATED “R” (restrictions)

“I have no desire to place restrictions on you, but I do want to promote what is good, what will help you to devote yourselves entirely to the Lord.” —1 Corinthians 7:35 We must accept certain restrictions if we wish to totally commit our lives to the Lord. Gospel poverty, celibacy, a large family, a faithful marriage, a demanding ministry — all restrict us significantly. However, any decision or commitment restricts us. Any successful athlete, business person, or celebrity has placed severe restrictions on themselves. How much more willing should we be to restrict ourselves out of love for the...

Today, we pray for all the busybodies and gossips

Lord Jesus, we surrender to you all the people who use their tongues to speak lies. Lord, when gossip is being formulated and used, be the unbreakable shield we rely on. We especially pray for those who tell tales and cause deep rifts; for everyone who meddles into our lives or has gossiped about us. A prayer for the society that we live in. Bless. Amen.

எல்லாம் நன்மைக்கே!

ஜான் ஒரு பெரிய கம்பெனியில் மேனஜராக வேலைப்பார்த்து வந்தான். கை நிறைய சம்பளம்,நல்ல முதலாளி.கடவுள் பக்தி உள்ளவர். ஜானுக்கு ஒரு தம்பியும்,தங்கையும் உண்டு. ஜானின் தம்பி,தங்கை இருவரும் படித்துக்கொண்டு இருந்ததால் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் படிப்பு செலவு,வீட்டு செலவு என்று போதுமானதாக இல்லை. இதனால் ஜான் அநேக வேளைகளில் சோர்ந்து போவான். அவன் அம்மா அவனுக்காக ஆறுதல் சொல்லி,அவனுக்காக ஜெபித்து வந்தார்கள் நம்மை உருவாக்கி நேசிக்கிற ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார்.நம்மை விட்டு விலகவும் மாட்டார். அவர் காட்டும் பாதையில் நடப்போமானால் அதில் நிச்சயம் நன்மை இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிவந்தார்கள். ஆனால் ஜானுக்கோ அவ்வளவாய் நம்பிக்கை இல்லை. ஒரு  ஆண்டு சென்றது. இந்த சூழ்நிலையில் போய்க்கொண்டு இருந்த கால நேரத்தில் ஜானுக்கு,வேறு ஒரு கம்பெனியில் இருந்து லெட்டெர் வந்தது. இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியை விட கூடுதலான சம்பளம் கிடைக்கும், வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஜானுக்கு இதில் மிகவும் பிரியமாக இருந்தது. ஆனால் அவன்...

கல்வாரியின் அன்பு

அன்பும்,பாசமும்,நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பும், நல்வாழ்த்துக்களும் இப்பொழுதும், எப்பொழுதும் உரித்தாகட்டும். இந்த உலகத்தில் உள்ள சுவாசமுள்ள யாவும் தம்மை படைத்த கடவுள் மேல் அன்பு கொண்டுள்ளது. அதிகாலையில் எழுந்து பாருங்கள். ஒவ்வொரு பறவை இனங்களும் என்ன அழகாக கூவி ஆண்டவரை போற்றுகிறது. தெருவில் திரியும் ஒரு நாய்க்கு என்றாவது ஒருநாள் சாப்பாடு போட்டால் அது நம்மை பார்க்கும்பொழுது அழகாக வாலை ஆட்டி தன் அன்பை வெளிப்படுத்தும். மனிதர்கள் முதல்கொண்டு எல்லா ஜீவராசிகளும் தம்மை படைத்த கடவுளுக்கு அன்பை வெளிப் படுத்தி தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. அதனால்தான் கடவுளும், தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு தன் சொந்த மகனையே அளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16. நமக்கு தண்டனை, தீர்ப்பு அளிக்க அல்ல. தமது மகன்மூலம் நம்மை மீட்கவே கடவுள் தமது மகனை உலகிற்கு அனுப்பினார். நீங்கள் யாராயிருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும் தனது உயிரை கல்வாரியில் ஒப்புக்கொடுத்து...