கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். சுமார் 800 வருஷங்களுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரசி இவ்வாறு எழுதி வைத்துள்ளார். நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை. நாம் விருப்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார். மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்.வேதனையுற்ற மனிதராய் இருந்தார். காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார். அவர் இழிவு படுத்தப்பட்டார். அவரை நாம் மதிக்கவில்லை.நம் துன்பங்களை சுமந்துக்கொண்டார்.நமக்காக சிறுமை படுத்தப்பட்டார்.அவரே நம் குற்றங்களுக்காக காயமடைந்தார்.நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்.நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்.அவருடைய காயங்களால் நாம் குணமடைகிறோம்.நாம் ஆடுகளைப்போல் வழி தவறி அலைந்தோம்,ஆனால் கடவுளோ நம் அனைவரின் தீச்செயல்களுக்காக அவரை காயப்படுத்தினார்.அடிப்பதற்கு இழுத்து செல்லும் ஆட்டைப்போலவும்,ரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போல் தமது வாயை திறவாமல் நம்முடைய பாவங்கள்,சாபங்கள்,அக்கிரமங்கள்,யாவையும் சுமந்தார். சாரோனின் ரோஜாவாய்,பள்ளத்தாக்கின் லீலிபுஷ்பமுமாயிருந்த அவர்,வாழ்நாள் முழுதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டுக் கிடந்த நம்மை விடுவிக்க அடிமையின்...
Like this:
Like Loading...