இரத்தம் சிந்துதல் இன்றிப் பாவமன்னிப்பு இல்லை. எபிரேயர் 9 : 22
உண்மையில் திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப் படுகின்றன. அதனால் இயேசு தம்மையே பாவ பலியாக கொடுக்கவே இந்த பூமிக்கு வந்தார். அவருடையே இரத்தமே எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். தூய்மைப் படுத்திக்கொண்டு இருக்கிறது. மோசேயின் காலத்தில் ஆடு, மாடுகள் பலியிடப்பட்டு குருவானவர் தமக்காகவும், மக்களுக்காகவும் அவற்றின் இரத்தத்தைக் கொண்டுப்போய் இரண்டாம் கூடாரத்தில் படைப்பார். அவர்கள் தங்கள் வழிப்பாட்டு பணிகளை நிறைவேற்ற முன் கூடாரத்தில் மட்டுமே நுழைவார்கள். இரண்டாம் கூடாரத்தில் தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார். இதனால் நாம் அறிவது தூய ஆவியார், முன்கூடாரம் நீடித்து இருக்கும்வரை, தூயகத்திற்குச் செல்லும் வழி இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறார். ஆனால் இப்போது கிறிஸ்து தலைமைக்குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதைவிட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட ஆடு, மாடுகளின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. இயேசு ஒருமுறை இந்த தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள...