† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

உண்மையான விசுவாசம்

Success does not mean winning the battle, but winning the war – என்று பொதுவாகச் சொல்வார்கள். போர் என்பது பல நாட்களாக நடக்கக்கூடியது. அதிலே ஒருநாள் வெற்றிபெற்றால், எதிரியை விட சிறப்பாக செயல்பட்டால், அது உண்மையான வெற்றியல்ல. இறுதியாக யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, எதிரியைத் தோற்கடிக்கிறார்களோ, அவர்கள் தான் வெற்றியாளர்கள். ஒரு விஞ்ஞானி தன்னுடைய கண்டுபிடிப்பிற்காக பலநாட்கள் செலவழிக்கிறார். அதிலே தோல்வி மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று, இத்தனை நாட்களாக தான், எதற்காக உழைத்தோமோ அதனை அவர் சாதிக்கிறபோது, வெற்றி பெற்றுவிடுகிறார். இதுதான் வெற்றி. இதனை மையப்படுத்தி தான், இன்றைய வாசகங்கள் அமைந்திருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை வெற்றியா? தோல்வியா? என்று யாரிடமாவது கேட்டால், அவரது இறப்பை வைத்து அதை தோல்வி என்று தான் சொல்வார்கள். அவர் அநீதியாக தீர்ப்பிடப்பட்டார் என்று தான் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. உயிர்ப்பு இயேசுவின் வெற்றியை எடுத்துச் சொல்கிறது....

இறைவனுடைய திருவுளம்

திருத்தூதர் பணி 16: 1 – 10 இறைவன் நம்மை வழிநடத்துகிறார். தன்னுடைய வழிநடத்துதலை அவர் எப்படி மானிடர்க்கு வெளிப்படுத்துகிறார்? இன்றைய வாசகம் நமக்கு அருமையான ஒரு எடுத்துக்காட்டை தருகிறது. பவுல் கனவு காண்கிறார். அவருடைய கனவில், மாசிதோனியர் ஒருவர், அவர்களுக்கு வந்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறார். அந்த கனவை இறைத்திருவுளமாக ஏற்று, பவுலடியார் அங்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். கடவுளின் திருவுளத்திற்காக உண்மையான உள்ளத்தோடு ஏங்குகிறபோது, இறைவன் நமக்கு நிச்சயம் வெளிப்படுத்துவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை இந்த பகுதியில் உறுதிப்படுத்தப்படுகிறது. விவிலியத்தில் கடவுள் தன்னை நோக்கி மன்றாடுகிற தன்னுடைய பிளள்ளைகளுக்கு பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். மோசேக்கு நெருப்புப்புதரில் தன்னை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்தினார். யோசேப்புக்கு கனவின் வழியில் இறைத்திருவுளத்தை வெளிப்படுத்தினார். இப்படி உதாரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரிடத்திலும் ஒற்றுமை இருப்பதையும் நாம் பார்க்கலாம். இவர்கள் அனைவருமே, கடவுளுடைய திருவுளத்தை அறிவதற்காக ஏங்கிக்கொண்டிருந்தவர்கள். அந்த ஏக்கம்...

உயிர்ப்பு தரும் அர்ப்பணம்

திருத்தூதர் பணி 15: 22 – 31 இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்ததில், தூய பவுலடியார் எந்த அளவுக்கு முன்மதியோடும், அர்ப்பண உணர்வோடும் செயல்பட்டார் என்பதை, இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. ஒரு சிலர் மக்களை குழப்புகிற நேரத்தில், சரியானவிதத்தில் அதனைக் கவனித்து, அவர்களை தெளிவுபடுத்துவதற்காக, சரியான ஆட்களை அனுப்புகிறார். அதுமட்டுமல்லாது, தன்னுடைய கடிதத்தின் மூலமாகவும் சிறப்பாக அவர்களை வழிநடத்துகிறார். அவருடைய கடிதத்தை வாசித்துக் கேட்டவுடன், மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களது விசுவாசம் உறுதிப்படுத்தப்படுகிறது. இறைமக்களை விசுவாசத்தில் கட்டியெழுப்ப, எவ்வளவுக்கு சாதாரண காரியங்களில் எல்லாம் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது, இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதில் தன்னுடைய நேரம் முழுவதையும் செலவிட்டார். எந்த அளவுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கிளம்பினாரோ, அதனை விட பல மடங்கு கிறிஸ்துவுக்காக உழைத்தார். பவுலின் இத்தகைய முழுமையான மாற்றத்திற்கான காரணத்தைத் தேடுகிறபோது, உயிர்ப்பு தான் நம்முடைய நினைவுக்கு வருகிறது. உயிர்த்த இயேசுவின் அனுபவம் அந்த...

THE SECRET OF JOY

“All this I tell you, that My joy may be yours.” —John 15:11 Jesus promises us we can have His joy, the joy of God enthroned in heaven. We receive this joy by keeping God’s commandments as Jesus kept the Father’s commandments (Jn 15:10). This may come as a surprise to many because we think joy depends on doing our own thing rather than God’s thing. However, let the facts speak for themselves. Possibly never before has a culture been so preoccupied with feeling good, pleasure-seeking, and selfish pursuits. Yet we are very discontent. Alienated youth, depression, drug and alcohol...

ஆண்டவர் தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2a, 2b – 3, 10 இறைவன் இஸ்ரயேல் மக்களை அற்புதமாக வழிநடத்தியிருக்கிறார். இறைவனின் வழிகாட்டுதலை, அற்புதமான முறையில், அதிசயமான முறையில் அவர்களை வழிநடத்தியதை, இஸ்ரயேல் மக்கள் மட்டும் தான் அறிவார்கள். இன்றைய திருப்பாடல், இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு செய்திருக்கிற சிறப்பான செயலை அறிவிப்பதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு பலவிதமான செயல்களைச் செய்திருந்தாலும், இந்த திருப்பாடல் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலாக விளங்குகிறது. 1குறிப்பேடு புத்தகத்தில்ன 13 வது அதிகாரத்திலிருந்து நாம் வாசிக்கிறபோது, இத்தியரான ஓபேது, ஏதோம் இல்லத்தில் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்ததை நாம் வாசிக்கலாம். அந்த பேழை அங்கே இருந்தவரை, கடவுள் அவரது குடும்பத்தை அற்புதமாக ஆசீர்வதித்தார் என்று விவிலியம் சொல்கிறது. அந்த பேழையை மீண்டுமாக கடவுளின் இல்லத்திற்கு கொண்டு வருகிறபோது, இந்த பாடல் பாடப்பட்டதாக நாம் சொல்லலாம். இதில் தான், கடவுள் எப்படியெல்லாம், படைபலம் பொருந்திய பெலிஸ்தியர்களையும், மற்ற நாட்டினரையும்...