Author: Jesus - My Great Master

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்

திருப்பாடல் 96: 1 – 2, 2 – 3, 11 – 12, 13 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுவதற்கு திருப்பாடல் ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார். கடவுளுக்கு ஏன் புதிய பாடலை பாட வேண்டும்? பாடல்கள் என்பது இறைவனின் மகிமையையும், வல்ல செயல்களையும், நம்முடைய நன்றியுணர்வையும் வெளிப்படுத்தக்கூடியவை. அவை ஏற்கெனவே பெற்ற இறையனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றவை. இப்போது, புதிய இறையனுபவத்தைப் பெற இருக்கிறோம். எனவே, இந்த புதிய இறையனுபவத்தின் அடிப்படையில் எழுத, ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இப்போது பெறுகிற புதிய இறையனுபவம் என்ன? அது தான், கடவுள் மீட்பரை, மெசியாவை நமக்கு அனுப்புகிற அனுபவம். கடவுளே தன் மக்களை மீட்பதற்காக மண்ணுலகிற்கு இறங்கி வருகிற அனுபவம். எப்போதெல்லாம் மக்கள் அடிமைத்தனத்தின் கட்டுக்களில் இருந்தார்களோ, அப்போதெல்லாம் அவர்களை மீட்பதற்கு அரசர்களையும், இறைவாக்கினர்களையும் ஆண்டவர் பயன்படுத்தினார். அவர்கள் வழியாக தன்னுடைய வல்ல செயல்களை நிறைவேற்றினார். ஆனால், இப்போது இறைவனே வர இருக்கிறார். அவரது வல்ல...

THE TIME OF FULFILLMENT

“Zechariah his father, filled with the Holy Spirit, uttered this prophecy…” —Luke 1:67 On this Christmas Eve, we stand at the threshold of the fulfillment of amazing prophecies. We may have been waiting for months or years for this, and this Christmas season will be the awaited time. Most of these prophetic promises of God may seem no closer to being fulfilled now than they have been for years. Some of these revelations you can hardly remember. It’s been so long since you first heard them. Nonetheless, now you are on the threshold, although you know this only by faith,...

வாய் திறந்தது, வாழ்த்தியது

லூக்கா 1:67-79 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஆண்டவரின் தூதர் சொன்னப்படியே திருமுழுக்கு யோவான் பிறந்ததும் பேச்சிழந்த செக்கரியா சத்தமாக பேசுகிறார். பேச முடியாமல் இருந்த நிலையில் அவர் பலவற்றை பேச முடியவில்லை. ஆகவே அனைத்தையும் சேர்த்து மொத்தமாக இப்போது பேசுகிறார், பாடுகிறார். வாழ்த்துகிறார். அவருடைய வாழ்த்திலிருந்து நாம் இரண்டு செய்திகளை நம் வாழ்க்கை பாடமாக பெற முடிகிறது. 1. நம்பிக்கைக்குரியவர் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர் என்பதை செக்கரியாவின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே அவநம்பிக்கை இல்லாமல் கடவுளின் வரத்திற்காக காத்திருந்து ஜெபிக்க வேண்டும் என்றும் செக்கரியாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவநம்பிக்கை கொள்ளும்போது நாம் கடவுளை பரிசோதிக்கிறோம். அது மிகவும் தவறானது என்பது நமக்கு தெரிகிறது. அவர் என்றும்...

CHRISTMAS PRESENCE

“All who heard stored these things up in their hearts, saying, ‘What will this child be?’ ” —Luke 1:66 I hope you’re more excited than you’ve ever been for Christmas — more excited than when you were a little child waiting to open your Christmas presents. The excitement I’m talking about is not primarily an emotion but an expression of faith. It’s not based on Christmas presents but on Christmas presence. The Lord is present. We can see Him setting the captives free, healing the sick, and working miracles (see Lk 4:18). We sense His presence within us, as He...

தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14 யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான...