Author: Jesus - My Great Master

இயேசு – ”குருத்துவம்” மற்றும் ”நற்கருனண” ஏற்படுத்திய நாள் கடைசி இரா உணவுத் திருப்பலி

(யோவான் 13 : 1-15) ‘முன் மாதிரி’ பாஸ்கா திருவிழா இஸ்ரயேலரின் பெரும் விழா. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து செங்கடலைக் கடந்து உரிமைப் பேறு பெற்றவர்களாய் மாறியதை நினைத்துக் கொண்டாடுகின்ற ஒரு பெருவிழா. பாஸ்கா விழா தொடங்க இருந்த நாளில் இயேசு நற்கருணையை உண்டாக்கியது அவர் நமக்களித்த விடுதலையையும், உரிமைப் பேற்றையும் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரயேலர் அனைவரும் எகிப்திலிருந்து மீட்கப்பட்டு விடுதலைப் பெற்றதற்காக, அவர்கள் இவ்விழாவினை நன்றியின் விழாவாகவும் நினைவு கூர்கிறார்கள். நாம் கொண்டாடுகின்ற நற்கருணைப் பலியும் நன்றியின் பலியே. நற்கருணை என்ற சொல்லுக்கே ஆண்டவர் செய்த நன்மைகளுக்கு நன்றி என்பதே பொருள். என் உடல், என் இரத்தம் நற்கருணையே நமது வாழ்வின் மையம், ஊற்று. நற்கருணை இல்லாமல் திருஅவை இல்லை. குருத்துவமில்லாமல் நற்கருணை இல்லை. இந்த மூன்றும் இல்லாமல் கிறித்தவம் இல்லை. இன்று பல சபைகள் நற்கருணை இல்லாமலே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடக்கக் கிறித்தவர்களை ஒன்றிணைத்ததே இந்த நற்கருணை. நற்கருணையைச்...

WHAT ARE YOU LOOKING FOR? (JN 1:38)

“From that time on [Judas] kept looking for an opportunity to hand [Jesus] over.” –Matthew 26:16 Judas Iscariot spent some of Holy Week with his eyes fixed on Jesus (Heb 3:1; 12:2). But Judas wasn’t watching Jesus for the purpose of growing as His disciple, though outwardly Judas was an apostle. In fact, Judas was apparently a powerful enough apostle that when Jesus mentioned at the Last Supper that one of the Twelve would betray Him, none of the other eleven disciples thought to accuse Judas of being that betrayer. Instead, they considered themselves more likely to be the betrayer,...

பணப்பற்றா? குருப்பற்றா?

(மத்தேயு 26 : 14-25) இந்த புனித வாரம் முழுவதும் இயேசுவின் தற்கையளிப்பையும் அதனைச் சுற்றி நடந்த அனைத்தையும் பற்றியே சிந்தித்து, நம் வாழ்க்கையை அதனோடு ஒன்றித்து உரசிப்பார்க்க அழைப்புக் கொடுக்கிறது நமது தாய்த்திருச்சபை. ‘செம்மறியாம் கிறித்துவின் இரத்தம் விலைமதிக்கப்படாதது’ என்கிறார் பேதுரு (1பேதுரு : 1-19) அப்படிப்பட்ட இறையவனைக் காட்டிக் கொடுக்கப் பேரம் பேசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் அவரோடு இணைந்தே பந்தியில் அமர்கின்றான் யூதாஸ். துரோகியை அரவணைப்பதிலும் இயேசு நமக்கு முன்னுதாரணமாகவும், முன்னோடியாகவும் இருக்கிறார். அவன் பேரம் பேசியது வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்கே. இது சாதாரண ஓர் அடிமையின் விலையாகக் கருதப்பட்டது. (செக் 11:12, விப 21:32) கடவுள் நிலையிலிருந்த அவர் நம்மை மீட்க மனிதனாக, நம்மில் ஒருவராகப் பிறந்தார். இறக்கும் பொழுதோ அடிமை நிலைக்கு தன்னைத் தாழ்த்தித் தன்னுயிரை நமக்குக் கையளித்தார். பணப்பற்று அவனது குருப்பற்றைக் கொன்றுவிட்டது. பண ஆசையால் கவரப்பட்டவன் அதிலே தன்னை மூழ்கடித்து...

NIGHT-LIGHT?

“No sooner had Judas eaten the morsel than he went out. It was night.” –John 13:30 Jesus died during a darkening of the sun (Mk 15:33). Jesus died when mid afternoon seemed like midnight. He died because of the night of our sins which the prince of darkness (see Eph 6:12) used to crucify the Light of the world (see Jn 8:12). When we betray, deny, ignore, or disobey Jesus, we turn out our light and enter into the night (Jn 3:19ff). However, when we repent, give ourselves totally to Jesus, and live our Baptisms, we too are the light...

உங்களில் ஒருவன்…!

(யோவான் 13 : 21-33,36-38) ‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்’ இந்த இறைவார்த்தை இன்றுவரை நமது திரு அவையில், பங்குதளத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகிறது. காட்டிக்கொடுப்பதும், முதுகில் குத்துவதும் இன்று நமது வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் யூதாசுகள் இன்று பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இன்றுவரை யூதாசைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பு செய்யப்பட்ட இருவரின் உண்மை முகமானது கிழிக்கப்படுகிறது. ஒருவர் யூதாசு, மற்றொருவர் பேதுரு. வயதில் முதிர்ந்தவர் பேதுரு, இளையவர் யூதாசு. அனைத்து நிகழ்வுகளிலும் இயேசுவோடு இருந்தவர் பேதுரு. அப்பப்பம் வந்து செல்பவர் யூதாசு. இவற்றை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் இன்றைய நற்செய்திக்கும், லூக்கா நற்செய்தியாளரின் ஊதாரி மகன் உவமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பார்க்கிறேன். எவ்வாறு இளையமகன் சொத்துக்களை (இறைவனின் அருள்) பெற்றுக் கொண்டு நெடுந்தொலைவு சென்றானோ (இறைவனை விட்டு வெகு...