Author: Jesus - My Great Master

ஆண்டவர் என் கற்பாறை

திருப்பாடல் 18: 1 – 2a, 2bc – 3, 46 – 50 இறைவனை பலவிதமான உருவகங்களில் இந்த திருப்பாடல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கற்பாறை, கோட்டை, மீட்பர், மலை, கேடயம், அரண் என்று இந்த உருவகம் நீண்டு கொண்டே செல்கிறது. உருவகத்தின் மூலமாக ஆசிரியர் சொல்லக்கூடிய செய்தி என்ன? மேற்சொன்ன உருவகங்கள் அனைத்துமே, கடவுளைப் பற்றிச்சொல்லக்கூடிய காரியம் ஒன்றே ஒன்று தான். கடவுள் பாதுகாப்பும், புகலிடமுமாய் இருக்கிறார் என்பதுதான் அது. இறைவன் இஸ்ரயேல் மக்களைப் பாதுகாத்து வந்த தருணங்களை இந்த பாடலானது எடுத்துரைக்கிறது. இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, யாரையெல்லாம் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதற்காக இறைவன் தேர்ந்தெடுத்திருந்தாரோ, அவர்கள் அனைவரையும் ஆண்டவர் காத்து வந்திருக்கிறார். குறிப்பாக, தாம் திருப்பொழிவு செய்த அனைவரோடும் ஆண்டவர் உடனிருந்திருக்கிறார். அவர்கள் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்கிறார். எதிரி நாட்டினரை வெற்றி கொள்ள முடியாது என்கிற நிலை இருந்தபோதிலும், ஆண்டவர் அவர்களை அற்புதமாக வழிநடத்திய, பாதுகாப்பு...

NO LISTEN, NO LOVE

“A cloud came, overshadowing them, and out of the cloud a voice: ‘This is My Son, My Beloved. Listen to Him.’ ” –Mark 9:7 Jesus’ apostles did not listen to Him when He spoke of the cross and other matters. If we don’t listen to someone, we probably won’t know them well. When we don’t know someone well, we usually don’t love them much. This proved true of the apostles, for one betrayed Christ, another denied Him, and all except St. John abandoned Him when He was crucified. In the Transfiguration, Jesus tried to change His apostles’ view of Him...

மாற்றத்ததை ரசித்து ருசித்து பார்க்கலாமே!

ஆண்டவரின் தோற்றமாற்ற விழா மாற்கு 9:2-10 இன்று நாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்ற விழாவினைக் கொண்டாடுகின்றோம். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு வித்தியாசமான நிகழ்வு இது. தம் சீடர்களில் மிகவும் நெருக்கமான மூவரை மட்டும் அழைத்துக்கொண்டு மலையேறும் இயேசு அங்கே செபிக்கிறார். செபிக்கும்போதே அவரது தோற்றம் மாறுகிறது. அவரது மனித சாயல் மறைந்து, இறைச் சாயல் வெளிப்படுகிறது. அவரது ஆடை வெண்ணிறத்தில் ஜொலிக்கிறது. விண்ணகக் காட்சியாக அது மாறுகிறது. பழைய ஏற்பாட்டின் இரு பெரும் தூண்களான மோசேயும், எலியாவும் தோன்றி அவருடன் உரையாடுகிறார்கள். ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்கிறது. “இவரே என் மைந்தர்” என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலிக்கிறது. இதுதான் இயேசுவின் உருமாற்ற நிகழ்வு. பழைய வாழ்க்கையில் படுத்து சுகம் கண்டுக்கொண்டிருக்கிற நாம் மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே நமக்கான உருமாற்றம் ஆகும். நம் வாழ்வில் ஏற்படும் மாற்றம் பல நிலைகளில் நமக்கு மட்டுமல்ல...

கடவுளின் வெளிப்பாடு

இறைவன் தன்னை பலவிதங்களில், பலவடிவங்களில் வெளிப்படுத்துகிறார். இயற்கையின் வடிவத்தில், இறைவார்த்தையின் ஒளியில், மனிதர்கள் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறபோது, நாம் அதனை உணர்ந்து, ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக வாழ்வதற்கு, இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்புவிடுக்கிறது. பேதுரு இயேசுவைப் பார்த்து, ”நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று சொன்னவுடனே, இயேசு இதனை கடவுளே வெளிப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார். இது இரண்டு செய்திகளை நமக்குத்தருகிறது. 1. இயேசு எப்போதும் கடவுளின் வெளிப்படுத்துதலுக்கு தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார். எனவே தான், அவரால் வெகுஎளிதாக கடவுளின் வெளிப்படுத்துதலை உணர முடிந்தது. அதனை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார். தன்னுடைய சீடராக பேதுரு இருந்தாலும், இது கடவுளின் வெளிப்படுத்துதல் என்பதால், அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை இயேசு பெற்றிருந்தார். அதனை போலவே, திறந்த உள்ளத்தோடு, கடவுளின் வெளிப்படுத்துதலுக்கு நாம் செவிசாய்ப்போம். 2. கடவுள் யார் வழியாகவும் தன்னை வெளிப்படுத்தலாம். பேதுரு சாதாரண மீனவர். ஆனால், அவர் வழியாக கடவுள் தன்னையே வெளிப்படுத்தினார்....

KEEP THE FAITH

“Jesus then said in reply, ‘Woman, you have great faith!’ ” –Matthew 15:28 The Canaanite woman cried out to Jesus: ” ‘Lord, Son of David, have pity on me! My daughter is terribly troubled by a demon.’ He gave her no word of response” (Mt 15:22-23). She kept shouting. Jesus replied, “My mission is only to the lost sheep of the house of Israel” (Mt 15:24). She pleaded, “Help me, Lord!” (Mt 15:25) Jesus answered: “It is not right to take the food of sons and daughters and throw it to the dogs” (Mt 15:26). She insisted (Mt 15:27). Her...