அவர் ஒரு ‘மாதிரி’
மத் 6 : 7 -15 தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும். இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது. இதன் இரண்டாம் பகுதி...