Author: Jesus - My Great Master

மாட்சியை உம் பெயருக்கே உரித்தாக்கும்

திருப்பாடல் 115: 1 – 2, 3 – 4, 15 – 16 இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே ஏதாவது ஒரு வகையில் சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். நமது பெயர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், நமது பெயர் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்கிறது. இந்த உலகத்தில் மன்னராட்சி முறை வழக்கில் இருந்தபோது, அரசர்கள் நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அது எதற்காக? தங்கள் வலிமை நிலைநாட்டப்பட வேண்டும். தங்களது பெயர் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இவ்வளவுக்கு நமது பெயரை நிலைநாட்ட முயற்சி செய்கிற நாம் ஒன்றை மறந்து விடுகிறோம். அதுதான் நமக்கு இந்த வாழ்வை வழங்கிய கடவுளின் திருப்பெயர். கடவுள் தான் நமக்கு எல்லாமே. கடவுள் இல்லையென்றால் இந்த வாழ்க்கை இல்லை, சாதனை இல்லை என்கிற உண்மை, நம்மில் பலருக்கு புரிவதும் இல்லை. புரிந்தாலும் அதனை வாழ்வாக்குவது கடினமாக இருக்கிறது....

“BECAUSE HE LIVES

“God will, in turn, glorify Him in Himself, and will glorify Him soon.” –John 13:32 We’re in the midst of a fifty-day Sunday, the Easter season. If we can’t rejoice in the Resurrection of Jesus from the dead, we must be dead ourselves. Because His tomb is empty, we have life to the full (Jn 10:10). “Because He lives, we can face tomorrow.” For He shall wipe every tear from our eyes, “and there shall be no more death or mourning, crying out or pain, for the former world has passed away” (Rv 21:4). “This means that if anyone is...

இயேசுவின் அன்பு

அன்பு என்கிற வார்த்தைக்கான விளக்கத்தை இன்றைய வாசகம் நமக்குத்தருகிறது. நான் ஒருவரை அன்பு செய்கிறேன் என்பதை, ஒரு மனிதன் பலவிதமான பண்புகள் மூலமாக வெளிப்படுத்துகிறான். மொத்த பண்புகளின் ஒட்டுமொத்த தொகுப்பே அன்பு என்றால், அது மிகையல்ல. இத்தகைய அன்பின் பலவிதமான பரிமாணங்களை இன்றைய நாளில் நாம் சிந்திப்போம். பொதுநலம், புரிதல், தியாகம் மற்றும் மன்னிப்பு இணைந்த ஒரு கலவை தான் அன்பு. இன்னும் இதற்குள் ஏராளமான பண்புகளை நாம் உள்ளடக்க முடியும். அன்பை வெளிப்படுத்தக்கூடிய காரணிகளாக இவை விளங்குகிறது. இயேசு தன்னுடைய சீடர்களை அன்பு செய்கிறேன் என்பதை, இதன் மூலமாகத்தான் வெளிப்படுத்துகிறார். இயேசுவின் வாழ்வில் பொதுநலம் மிகுந்திருந்தது. தன்னுடைய சீடர்கள் தவறு செய்தாலும், அதனை மிகைப்படுத்தாமல் புரிந்து கொள்கிறார். அவர்களை அவர் தீர்ப்பிடவில்லை. அவர்களுக்காக, மக்களுக்காக தன்னையே தியாகம் செய்கிறார். சீடர்கள் தவறு செய்தாலும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு இயேசு சீடர்கள் மட்டிலான தனது அன்பை வெளிப்படுத்துகிறார். அன்பு என்பது...

FROM BOGGED DOWN TO FIRED UP

“During those days, Peter stood up.” –Acts 1:15 Jesus commands us to go forth, bear fruit (Jn 15:16), make disciples of all nations (Mt 28:19), and take more initiative in building God’s kingdom than the worldly take in making money (Lk 16:8). We are to be zealous for the Lord. Nevertheless, many of us are rather apathetic and listless. We sit around and think of all the things we should have done but have never accomplished. We are like the disciples in the upper room who did not replace Judas for over forty days. Some of us have a backlog...

இறைவன் வழங்கும் கொடைகள்

திருத்தூதர் பணி 1: 15 – 17, 20 – 26 இறைவன் நமக்கு பல அருள்வரங்களை வழங்குகிறார். ஆனால், அந்த அருள் நம்மிடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற வாழ்க்கையை நாம் வாழாவிட்டால், நிச்சயம் அது நம்மிடமிருந்து எடுக்கப்படும். அதுதான் யூதாசின் வாழ்க்கையில் நடந்திருப்பதாக, முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. யூதாஸ் அடிப்படையிலே எப்படிப்பட்டவன் என்பதை ஒருவர் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், அவனுக்கு கடவுளின் நிறைவான அருள் வழங்கப்பட்டது. இறைவனுடைய மகன், தனக்கு பின்னால் தொடரப்பட இருக்கிற புனிதமான பணிக்கான கருவியாக அவரைத் தேர்ந்தெடுக்கிறார். பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ வேண்டிய யூதாஸ், அதனை உதாசீனப்படுத்திவிடுகிறான். அந்த இழப்பு மற்றவர்களால் அவனுக்கு நேர்ந்ததல்ல. அவனுடைய நிலைக்கு அவன் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்த இழப்பு மற்றொருவருக்கு ஆதாயமாக முடிகிறது. மத்தியா என்கிறவர் யூதாசின் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இறைவனுடைய அருளும், கொடைகளும் நமக்கு வழங்கப்படுகிறபோது, அதனை பெறுவதற்கு நாம் தயாராக இருக்க...