Monthly Archive: April 2020

செய், சொல்

யோவான் 20 : 1-9 இயேசுவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் மூலைக்கல், ஆதாரம். அதை நம்புவதும், அடுத்தவருக்கு அறிவிக்க பெண்களைப்போல நற்செய்தியாளர்களாய், திருத்தூதர்களாய் செயல்படுவதும் நமது கடமை. இயேசுவின் உயிர்ப்பே இன்று நம் அனைவரையும் ஒன்று கூட்டி வைத்திருக்கின்றது. மரணத்தை வென்றவர்கள் தான் நாம். காரணம் சாவின் கொடுக்குகளை வெட்டியெறிந்து விட்டார் நம் இயேசு. இதனை நாம் கொண்டாட கூடியுள்ளோம். மனித இனத்தின் மிகவும் மோசமான எதிரி சாவு. இச்சாவினை இயேசுதன் சாவினைக் கொண்டு வீழ்த்தி விட்டார். நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிடக் கிறிஸ்துவின் உயிப்ப்பே நற்செய்தியை விளக்குகிறது.ள ஏனெனில் கிறிஸ்து உயிர்க்கவி;ல்லையென்றால் நமது நம்பிக்கைப் பொருளற்றது. ( 1 கொரி 15:14) ஆண்டவரின் உயிர்ப்பு செய்தி முதன்முறையாகப் பெண்களுக்குத் தான் அறிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாகவே உண்மையானது உலகிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. யூத சமுதாயத்தில் பெண்களின் சாட்சிசெல்லவே செல்லாது. ஆனால் தொடக்க முதல் இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் தேர்ந்தெடுக்கின்ற இயேசு,...

GRAVE-SIN?

“In baptism you were not only buried with Him but also raised to life with Him because you believed in the power of God Who raised Him from the dead.” —Colossians 2:12 Today in the Catholic community, we have no Mass and no Holy Communion until we celebrate the Easter Vigil. It is a most peculiar day during which we identify with Jesus buried in the tomb. “Through baptism into His death we were buried with Him” (Rm 6:4). To be buried with Christ means that our old fallen nature is “six feet under.” We must keep it that way...

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்

விடுதலைப்பயணம் 15: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 – 18 எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக, பார்வோன் மன்னருக்கு ஊழியம் செய்து வருகின்றனர். கடவுள் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காக, மோசேயையும், ஆரோனையும் அனுப்புகிறார். அவர்கள் பார்வோன் மன்னரிடத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றனர். கடவுளின் வல்ல செயல்களுக்கு முன்னால், தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்த பார்வோன் மன்னன், இஸ்ரயேல் மக்களை போக அனுமதிக்கிறான். ஆனால், அவர்களைப் போகவிட்டதற்காக மனம் வருந்துகிறான். அவர்களைப் பிரிந்ததற்காக அல்ல, மாறாக, அவர்கள் செய்து வந்த அடிமை வேலையை இனி தனக்கு யார் செய்வார்கள்? என்கிற எண்ணத்தினால், மனம் வருந்துகிறான். அவர்களை திருப்பி இழுத்து வர, ஆணையிடுகிறான். அப்போது, தண்ணீர் இரண்டாகப் பிளந்து, இஸ்ரயேல் மக்கள் கரைசேர்ந்து விடுகின்றனர். ஆனால், எகிப்தியர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். இவ்வாறு கடவுள் தந்திருக்கிற மீட்பிற்கு நன்றியாக, மோசேயும், இஸ்ரயேல் மக்களும் பாடி...

THE DEATH OF FEAR

“Take courage and be stouthearted, all you who hope in the Lord.” —Psalm 31:25 As Jesus agonized over His decision to lay down His life for us, He was so severely tempted to give in to fear that His sweat became as drops of blood (Lk 22:44). Nonetheless, Jesus refused to be intimidated by Satan. He stood up to a cohort of soldiers and several police officers (Jn 18:3). “They retreated slightly and fell to the ground” (Jn 18:6) in the face of Jesus’ love and courage. Then Jesus fearlessly died on the cross for us. However, except for the...

அவரின் மனநிலை

யோவான் 18: 1- 19 : 42 எத்தனையோ மக்கள் தம் உயிரைப் பிறர்க்கெனக் கொடுத்துள்ளார்கள். எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் தனது நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் எவரது இரத்தமும் பாவக் கறைகளைக் கழுவியதாக வரலாறு இல்லை. பலருக்காக ஒருவர் இறந்த சரித்திரம் இல்லை. ஆனால் ஆண்டவரின் இரத்தமே “பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத்தேயு 26:29). நம்மை நீதிமான்களாக்கிய இரத்தம் (உரோ 5:9). விலை மதிக்கப்படாத இரத்தம் (1பேதுரு 1:19). கல்வாரியில் பெரிய வெள்ளியன்று சிந்தப்பட்ட இவ்விரத்தமே நம்மை மீட்கும் இரத்தம். இந்த இரத்தம்தான் நம் அடிமைத்தனத்தை மாற்றி எழுதியது. இப்படி இயேசு மக்கள் அனைவரையும் கடவுளுக்கு முன்பாக தனது சிலுவையின் மூலமாகக் கூட்டிச் சேர்த்தார். அவருக்கு முன் நிற்கத் தகுதியுள்ளவர்களைத் தரம் உயர்த்தினார். அநியாயக் குற்றம் சுமத்தி இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை பிலாத்து உணர்ந்தான். எனினும் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். இயேசுவின்...