முரண்பாடல்ல…. முரண்சுவை……
எரே.17:5-6, 1கொரி.15:12,16-20, லூக். 6:17,20-26
விவிலியம் முழுவதும் செல்வர்களுக்கு எதிரான போர் முரசு முழங்கிக் கொண்டே இருக்கின்றனவே இதன் காரணம் என்ன? ஏழ்மையில் நாம் அனைவரும் இருப்பதையே ஆண்டவர் விரும்புகின்றாரா? அப்படியென்றால் அரசியல்வாதிகளும், செல்வர்களும் கடவுளின் கருவியாகத்தானே இருக்கமுடியும். காரணம் அவர்களால் மட்டுமே இன்று வரை ஏழ்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாம் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க நுஆஐ – சீக்கிரம் கட்டிமுடிக்க, பையனுக்கு நல்ல பணக்கார, படிச்ச பெண்ணை பார்க்க……. இன்னும் அடிக்கிக்கொண்டே ஆண்டவரே நின் வரத்தைத் தா என்றல்லவா இன்று அவரின் பாதம் தேடி வந்திருக்கிறோம். ஏழ்மையாய் இருப்பதும் துன்பப்படுவோரும் பேறுபெற்றோர் என்றால் நாம் ஏன் உழைக்கவேண்டும், நாம் ஏன் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் இதனை நுட்பமாக அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இது ஒரு முரண்சுவை. இச்சுவையினை அறிந்திட முயலுவோம்.
நற்செய்தியை மேலோட்டமாக படிக்கின்றபோது இயேசு நம்மை ஏழையாக பட்டினி கிடந்து சாகக்கூடியவர்களாக, வெறுத்து ஒதுக்கபடுபவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போன்றும், இயேசு செல்வர்களுக்கு எதிரானவர் போன்றும் தோன்றும். ஆனால் இரண்டுமே தவறு.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் இல்லாதவர்கள் ஏழை இல்லை. அடுத்தவர்களுக்கு உதவாதவர்கள் தரன் ஏழை. ஓர் ஏழையால் மட்டுமே இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள முடியும். ஏழையால் மட்டுமே அனைத்தையும் இறைத்திருவுளமாக ஏற்கும் புனித நிலையை அடைய முடியும், ஏழையால் மட்டுமே பிறரின் வயிற்று பசியை தன் வயிற்றுப் பசியாக என்ன முடியும். ஏழையால் மட்டுமே தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிறருக்கும்; பகிர வேண்டும் என்கின்ற தாய்மை நிலையினை அடைய முடியும். துறவிகள் “ஏழ்மை” என்ற வார்த்தைப்பாட்டினை எடுப்பதன் நோக்கமே இது தான். இரண்டு கைகளிலும் பணப் பெட்டியைத் தூக்கி நடந்து செல்பவன் அருகில் ஓர் குழந்தை கீழே விழுந்தாலும் அவனால் அதனைத் தூக்கிவிட முடியாது. இது தான் செல்வர்களின் மனநிலையாக பொதுவாக இருக்கும். ஆண்டவர் இந்த செல்வந்தர்களின் மனநிலையைத்தான் (யுவவவைரவந) சாடுகிறார்.
இந்த செல்வர்களின் மனநிலை பெரும்பாலும் தம்முடைய நம்பிக்கையை கடவுள் மீது வைப்பதைவிட செல்வத்தின் மீதே வைக்கின்றனர். கடவுளை விட செல்வமே எனக்கு பாதுகாப்பானது, மேன்மையானது என எண்ணுகின்றனர். “செல்வர்கள் தம் செல்வத்தை அரண் என்றும் உயரமான மதில் என்றும் எண்ணிக் கொள்கின்றனர். (காண்க நீ.மொ 18:11) இச்செல்வமே சிலைவழிபாடாகிய பேராசைக்கு இட்டுச் செல்கின்றது. (எபே 5:5) இதனால் பிறரன்பும், இறையன்பும் காற்றில் பறக்கவிடப்படுகிறது.
இன்னும் நுட்பமாக கவனிக்க வேண்டியது இயேசுவின் இறுதி தீர்ப்பு நாளில் அவர் நம்மிடம் திருவிவிலியத்தை முழுவதையும் படித்து முடித்திருந்தாயா? 10 கோடிக்கு எனக்கு திருக்கோவில் கட்டினாயா? லட்சங்களில் எனக்கு திருவிழா எடுத்து கொண்டாடினாயா?…. என்றெல்லாம் கேட்க மாட்டார். மாறாக, இச்சிறியோராகிய ஏழைகளுக்கு நீ என்ன செய்தாய்? என்ற ஒற்றைக் கேள்வியில் நம் வாழ்க்கைப் படத்தின் ஊடiஅயஒ (இறுதிக்கட்டம்) முடிந்து விடும். எனவே இன்னைக்கு என்னால் உதவ முடியல்ல… யாருக்கு நான் உதவவேண்டும்? எல்லாரும் நல்லா தானே இருக்கிறார்கள். நானும் தான் கஷ்டப்படுகிறேன். நானே ஓர் ஏழை. எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் உதவுவேன், எனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்று விதண்டாவாதம்; பேசாமல் நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.
– திருத்தொண்டர்.வளன் அரசு