கடவுளுக்கு நாம் செலுத்தும் நன்றி
தியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1. 2-3. 3-4
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும்
உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார்
இந்த திருப்பாடல் கடவுள் வாக்களித்த மெசியாவைப்பற்றியும், அவர் இந்த உலகத்தை எப்படி ஒன்றுசேர்க்கப்போகிறார் என்று எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னமே சொல்கிற இறைவாக்கு தொடர்பான திருப்பாடல். மெசியா கொண்டு வருகிற மீட்பும், மீட்பைப்பெற்றவர்களின் மகிழ்ச்சியும் இங்கே பாடலாகத் தரப்படுகிறது.
கடவுள் நமக்கு செய்திருக்கக்கூடிய வல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரைப்போற்ற வேண்டும். புகழ வேண்டும். அந்த புகழ்ச்சி ஒவ்வொருமுறையும் புதுமையானதாக இருக்க வேண்டும். அது சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுள் நமக்கு வல்லமையுள்ள, ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருப்பாடல் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது.
கடவுளுக்கு எப்போது நாம் நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் அளப்பரியவை. அந்த நன்றியுணர்வோடு இந்த திருப்பாடல் வழியாக கடவுளைப் புகழந்தேத்துவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்