அதிஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டட்டும்…
மத்தேயு 20:1-16
இறையேசுவில் இனியவா்களே! பெருமகிழ்வோடு இந்த நாளை கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
எனக்கு மட்டும் அதிஷ்டமே கிடையாது என புலம்புவோர் நம்மிலர் பலர் இருக்கின்றனர். இவர்கள் கடைசி வரை புலம்பிக்கொண்டே தான் இருப்பார்களே தவிர, அதிஷ்ட தேவதை கதவைத் தட்ட என்ன செய்ய வேண்டும். என்ன முயற்சி எடுக்க வேண்டும் என்பதை ஒருபோதும் நினைப்பதே இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல இரண்டு யோசனையை வழங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். அது என்ன யோசனைகள்?
தங்கள் வேலையைப் மட்டும் பார்க்க வேண்டும்
நமக்கு பிறருடைய வேலையைப் பார்ப்பதே மிகவும் பழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட நாம் எனக்கு லக்கே இல்லை என சொல்வது நியாயம் தான். ஏனென்றால் என் வேலையின் வளர்ச்சிக்காக நான் நினைக்காமல், உழைக்காமல் அடுத்தவர் வேலையில் நான் தலையிட்டால் எனக்கு எப்படி அதிஷ்டம் கிடைக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் முதலில் வந்வர்ககள் தங்கள் வேலையைப் பார்க்காமல் அடுத்தவரைப் பற்றி குறை சொன்னார்கள். அடுத்தவர்கள் காரியத்தில் நுழைந்தார்கள. ஆகவே அதிஷ்ட தேவதை அவர்களை விட்டு அகன்றது.
பிறர் வேலையில் வளர்ச்சியடைய மன்றாட வேண்டும்
எனக்கு கடவுள் அதிஷ்ட தேவதையை அனுப்பி என்னை ஆசீர்வதிக்க வேண்டுமென்றால் நான் கண்டிப்பாக அடுத்தவர் நல்ல உடல்சுகத்தோடு வாழவும், பொருளாதார முன்னேற்றம் பெறவும் மனதார மறக்காமல் ஜெபிக்க வேண்டும். அப்படி ஜெபிக்கும் போது கடவுள்தாமே அதிஷ்ட தேவதையை அனுப்புவார். ஆசீரை வாரி வாரி வழங்குவார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் அடுத்தவர் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்ததால் கூலி கொடுக்கும் போது பொறைாமைக் கொண்டனர். ஆகவே அதிஷ்ட தேவதை அவர்களை விட்டு அகன்று போனது
மனதில் கேட்க…
என் வாழ்க்கையில் எதற்கு எனக்கு அதிஷ்டம் இல்லை?
அதிஷ்ட தேவதைக் கதவைத் தட்ட நான் முயற்சி எடுக்கலாமா? தியானித்ததைக் கடைப்பிடிக்கலாமா?
மனதில் பதிக்க…
கனிவுடையோர் பேறுபேற்றோர், ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்(மத் 5:5)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா