குருத்து ஞாயிறு
லூக் 22 :14- 23:56 சந்தித்து சாதிக்க, சிந்திக்க குருத்து ஞாயிறு, ‘ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து அவற்றை மீட்பின் சக்தியாக மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏன் எருசலேம்? இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை அவர் நன்கு தெரிந்திருந்தார். இதுவரை என் காலம் இன்னும் வரவில்லை என்றவர் காலம் வந்துவிட்டதை மிகவும் நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் நுழைகிறார். ஏன் இன்று? யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படம் நாள், ஆம் அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள்...