“அன்னைதின அறைகூவல்” (Mother’s Day Proclamation)
“தாயிற் சிறந்த கோவில் இல்லை” அன்னையர் அனைவருக்கும், அன்னை தின வணக்கங்களும், வாழ்த்துக்களும். “அன்னைதின அறைகூவல்” (Mother’s Day Proclamation) சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe அவர்கள், 1870ம் ஆண்டு, “அன்னைதின அறைகூவல்” (Mother’s Day Proclamation) என்ற பெயரில் சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதை, அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது. இதோ அக்கவிதை: மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்! உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி… இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள். உறுதியாகச் சொல்லுங்கள்: வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள்...