மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்
தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் நம் பாரதம் செழித்தோங்க வேண்டும் | Nam Bharatham [Song from our Album: விழித்திடு(Vizhitthidu)] https://www.youtube.com/watch?v=LPf9iShIwnA நம் பாரதம் செழித்தோங்க வேண்டும் புது சரித்திரம் படைத்தேற வேண்டும் (2) போர் களங்களும் வயல் வெளிகளாகட்டும்; கொடும் ஆயுதம் ஏர் கலப்பை ஆகட்டும்(2) பூந்தோட்டமாய் இந்த பூமியே இனி பூப்போலே பூத்தாடும் அன்போடு பண்பாடும் (நம்பாரதம்) சாதி மத பேதம் யாவும் அழிந்தோட சமத்துவம் ஒன்று வேண்டும் நாடு நமதென்று நாமும் அதில் ஒன்று ஒற்றுமை ஓங்க வேண்டும் வெற்றி நமதாக வேண்டும் அமைதி செழித்தோங்க வேண்டும் (2) நித்தம் சமமென்னும் மனிதம் உயர்வென்னும் பேதங்கள் காணாமல் போகின்ற நாளாக (நம் பாரதம்) மகிழ்ந்து ஆடும் மழலைகள் மனதில ஏக்கம் ஆயிரம் (2) துவண்டு துவண்டு போனதே துள்ளும் பருவம் வீணிலே (2 ) (2) கல்வி கற்கும் வயதினில் பார சுமைகள் ஏனடா...