Tagged: Easter

என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு

அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் வாழ்த்துக்கள் திருப்பாடல் 118: 1 – 2, 16 – 17, 22 – 23 (24) கடவுளது பேரன்பு என்றென்றும் உள்ளது என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். ”என்றென்றும்” என்பதின் பொருள் என்ன? “எல்லாக்காலத்திலும்” என்று நாம் பொருள் கொடுக்கலாம். அதாவது, வறுமையோ, துன்பமோ, வாழ்வோ, தாழ்வோ எல்லா நேரத்திலும் ஆண்டவரின் அன்பு, நம்மிடத்தில் உள்ளது. குறிப்பாக, நாம் தவறு செய்தாலும், ஆண்டவர் நம்மை முழுமையாக அன்பு செய்கிறார். நாம் செய்த தவறை நினைத்து, வருந்துவாரே அன்றி, நம்மை மீட்பதற்கு முயற்சிகள் எடுப்பாரேயன்றி, அவர் நம்மை தண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறவர் கிடையாது. அதுதான் கடவுளின் பேரன்பு என்று, திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுளின் அன்பிற்கு ஈடு இணையே இல்லை. எனவே தான், அவருக்கு நன்றி செலுத்துங்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப, கடவுள் நமக்கு தண்டனை கொடுப்பவர் என்றால், நாம்...

Happy Easter