Tagged: daily verse

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 14:19

அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக! ~உரோமையருக்கு எழுதிய திருமுகம் 14:19

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1:10

சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். ~கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1:10

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:17

நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:17